Published : 14 Dec 2014 11:42 AM
Last Updated : 14 Dec 2014 11:42 AM
கோவை, கற்பகம் பல்கலைக் கழகத்தில் 5-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் இராச.வசந்தகுமார் தலைமை வகித்தார்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குண சேகரன், வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலைய தவத்திரு ஊரான் அடிகள், பிஹார் மாநில ஆசிரியர் ஆனந்த்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினர் கேசிபி சுகர் முதன்மை தலைவர் வினோத் ஆர்.சேத்தி பட்டங்களை வழங்கிப் பேசினார்.
விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக இளங்கலை, முதுகலையில் ஜோதிடத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்த மாணவர் எஸ்.பழனிச்சாமி முனைவர் பட்டம் பெற்றார். இவர் மானுட ஜாதகங்களில் செவ்வாய் கோளினால் ஏற்படும் நன்மை, தீமை என்கிற தலைப்பில் ஆய்வு செய்துள்ளார். இவருக்கு பல்கலையின் ஜோதிடத்துறை தலைவர் முனைவர் கே.பி.வித்யாதரன் நெறியாளராக இருந்துள்ளார்.
நாகராஜ் என்ற மற்றொரு மாணவரும் இதேபோல் ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
பழனிச்சாமி, நாகராஜ் ஆகியோருக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டங்கள் வழங்கு கிறார் கேசிபி சுகர் மற்றும் தொழில் கழகத்தின் செயற்குழுத் தலைவர் வினோத் ஆர்.சேத்தி. உடன் பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாக அலுவலர் முருகையா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT