Published : 20 Dec 2014 11:48 AM
Last Updated : 20 Dec 2014 11:48 AM
அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, வரும் 24-ம் தேதி, அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்துகின்றனர்.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு: அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, வரும் 24-ம் தேதி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கட்சியின் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொள்வர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT