Published : 04 Dec 2014 02:41 PM
Last Updated : 04 Dec 2014 02:41 PM

652 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடம்: பதிவுமூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 652 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு, தகுதியானவர்களின் பட்டியல் அரசு இணையதளத்தில் வெளியி டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை நேற்று வெளி யிட்ட அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் இருந்து 652 கணினி பயிற்றுநர் பணி காலியிடங்களுக்கான அறிக்கை பெறப்பட்டது. இந்த காலிப்பணியிடங்கள் மாநில அளவில் கடந்த அக்டோபர் 20-ம் தேதி நிலவரப்படி தகுதியுள்ள வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களின் பெயர், பதிவுமூப்பு விவரங்கள், இனவாரியாக தமிழக அரசின் www.tn.gov.in/employment என்ற இணையதளத்தில் வெளியி டப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் காலிப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயதுவரம்பு, இனசுழற்சி விவரங்கள் ஆகியவற்றையும் காணலாம். மேலும் மனுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பதை இணையதளத்தைப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். பரிந்துரை பதிவுமூப்பு தேதிக்குள் தகுதியான மனுதாரர்கள் எவரும் விடு பட்டிருந்தால், அவர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தினை உரிய ஆதாரத்துடன் வரும் 10-ம் தேதிக் குள் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x