Published : 29 Dec 2014 09:57 AM
Last Updated : 29 Dec 2014 09:57 AM
பாஜக ஆட்சியில் மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டு, தனியார்மயம், தாராளமயம் என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப்படுவதாக ஏஐடியுசி பொதுச் செயலர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தில் 22-வது மாநில 3 நாள் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று மாநாட்டைத் தொடக்கி வைத்து குருதாஸ் தாஸ்குப்தா பேசியது:
பாஜக ஆட்சியில் மதவாதம் தலைதூக்கி வருகிறது. பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் மிரட்டப்பட்டு மதமாற்றம் செய்யப் படுகின்றனர். மேலும், இந்தியாவை இந்துத்துவ நாடு என்று கூறுவது நாட்டை பிளவுபடுத்திவிடும். அரசு, வங்கி ஊழியர்கள் மதமாற்றத்துக்கு எதிராகவும் போராட முன் வர வேண்டும்.
மத்திய பாஜக அரசு பணவீக் கத்தை கட்டுப்படுத்தவோ, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கவோ, விலைவாசி யைக் குறைக்கவோ, வேலை வாய்ப்பை அதிகரிக்கவோ, தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மாறாக பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை முன் னெடுத்து வருகிறது.
வெளிநாடுகளில் விரட்டப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு நம்நாட்டில் ரத்தினக் கம்பளம் விரிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு அந்த துறையின் நோக்கத்தையே சீர்குலைக்கும். மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காது.
அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து போக்குவரத்து, மின்சாரம், வங்கி ஆகிய துறைகள் அரசுக்கு எதிராக போராட முடிவு செய்துள்ளன. இந்தியாவில் 62 சதவீத தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை கிடைக்கவில்லை. இவர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலியை விட குறைவாகவே வழங் கப்படுகிறது. வங்கிக் கடனை செலுத் தாதோர் பட்டியலை அரசு வெளி யிட வேண்டும் என்றார்.
மாநாட்டில் அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் வெங்கடாசலம், செயலர் ராம்பாபு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனத்தின் பொதுச் செயலர் நாகராஜன், மலேசிய வங்கிகளின் பொதுச் செயலர் சாலமன் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT