Published : 13 Dec 2014 08:37 AM
Last Updated : 13 Dec 2014 08:37 AM

ரஜினி ரசிகர்களின் புதிய கட்சி: ‘சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்’ தொடக்கம்; ரஜினி பெயர், புகைப்படம் இடம்பெறாது என அறிவிப்பு

ரஜினி ரசிகர்களின் ‘சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்’ கட்சி திருப்பூரில் நேற்று தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம், மனித தெய்வம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், மகளிர் சேவை மையம், இளைஞர் பேரவை ஆகிய 4 துணை அமைப்புகளுடன் 14 மாவட்டங்களில் இயங்கும் இந்தத் தொழிற்சங்கத்தில், 1.36 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 65 சதவீதம் பேர் மகளிர். இதன் தலைவராக எஸ்.எஸ்.முருகேஷ் உள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. அப்போது, ‘சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்’ என்ற புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. நீலம், வெள்ளை, சிவப்பு நிறங்களுடன் நட்சத்திரங்களும், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பெரியார், காமராஜர் ஆகியோரது படங்களும் கொடியில் இடம் பெற்றுள்ளன.

புதிய கட்சிகுறித்து செய்தி யாளர்களிடம் எஸ்.எஸ்.முருகேஷ் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு நிமிடமும் ரஜினிக்காக வாழ்ந்தும், திரைப்படம் வெளியாகும் நாளில் சிறப்பான வரவேற்பும் அளித்து வந்தோம். ஆனால், ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளியாகும் நேரத்தில், மதுவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘கோச்சடையான்’ ரதம் தயார் செய்யப்பட்டது. ஆனால், இந்த ரதத்தை இயக்கவிடாமல் பல்வேறு இடையூறுகள், நெருக் கடிகள் ஏற்பட்டன.

இந்நிலையில், தொழிற் சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டிய நிலை ஏற் பட்டது. ரஜினிகாந்தின் பிறந்த நாள் நினைவாகத்தான், இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள் ளோம். காலையில் ‘லிங்கா’ படம் பார்த்துவிட்டு, ஆயிரம் குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்சிக்காக ரஜினியின் பெய ரையோ, புகைப்படத்தையோ எந்த வகையிலும் பயன்படுத்த மாட்டோம்.

மக்களின் பிரச்சினைகளுக் காக போராட உள்ளோம். மக்கள் சேவையை, மேலும் வலுப்படுத் தவே கட்சி தொடங்கியுள்ளோம் என்றார். கட்சியின் மாநில பொதுச் செயலாளராக எஸ்.எஸ்.முருகேஷை கன்னியாகுமரி, கோவை, கரூர் உட்பட 14 மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தனர்.

திருப்பூரில் நேற்று நடந்த தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்க செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x