Published : 27 Dec 2014 11:13 AM
Last Updated : 27 Dec 2014 11:13 AM
இந்த ஆண்டுக்கான அரவைப் பருவம் தொடங்கியும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை கரும் புக்கான கொள்முதல் விலையை அறிவிக்காததால் பயிரிடப்பட்ட கரும்புகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 27 தனியார் சர்க் கரை ஆலைகளும் பொதுத்துறை ஆலைகள் இரண்டும், கூட்டுறவுத் துறை ஆலைகள் 13-ம் இயங்கி வருகின்றன. கடந்த 2013-14-ம் ஆண்டில் கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ. 2,650 என மத்திய, மாநில அரசு கள் அறிவித்தன. இதில், போக்கு வரத்துச் செலவினங்களுக்காக ரூ. 100 பிடித்தம் செய்யப்படும்.
பழையே விலையே நீடிக்கும்
ரூ. 2,650 என்ற கொள்முதல் விலை தங்களுக்குப் போதாது என விவசாயிகள் குரல் எழுப்பினர். இந்நிலையில், நடப்பு 2014-15 ஆண்டுக்கான அரவைப் பருவம் தொடங்கியும், இதுவரை கரும்பு கொள்முதலுக்கான புதிய விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை.
தற்போது ரூ. 2,650 விலையி லேயே ஒருசில தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்துள் ளன. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு, தற் போது மதுரை மாவட்டத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலை மூலம் கொள்முதல் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
இந்நிலையில் கரும்பு விவசாயிகள் அரசு அறிவித்துள்ள விலை கட்டுபடியாகாது என்று கூறி, கரும்பை அறுவடை செய்ய மறுத்து வருகின்றனர். விளைந்த கரும்பு உரிய காலத்தில் அறுவடை செய்யப்படாததால், அதன் எடை குறைவதோடு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலையும் உள்ளது.
ரூ. 5.14 கோடி நிலுவைத் தொகை
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச் சந்திரராஜா கூறும்போது, விருது நகர் மாவட்டத்தில் சுமார் 1,000 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி யாகிறது. குறிப்பாக, திருவில்லி புத்தூர், ராஜபாளையம் பகுதி களில் அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் விவசாயி களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புகளுக்காக விவசாயிகளுக்கு ரூ. 5.14 கோடி நிலுவைத் தொகை உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் அதற்கான தொகை வழங்கப்பட வேண்டும். கால தாமதம் ஏற்பட்டால், அதற்குரிய வட்டியுடன் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆனால், ஒரு டன்னுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.350 வீதம் கொள்முதல் செய்யப்பட்ட 713 டன்னுக்கும் நிலுவைத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதை விரைவில் கொடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் தலைமை யில் அண்மையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தனியார் கரும்பு ஆலை நிர்வாகம் நீதி மன்றத்தில் முறையீடு செய்வதா கக் கூறிக்கொண்டு கூட்டத்திலி ருந்து விலகியது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கரும்பு கொள்முதல் விலையை மத்திய, மாநில அரசுகள் இதுவரை அறிவிக் காதது கரும்பு விவசாயிகளை ஏமாற்றமடையச் செய்கிறது.
கரும்புக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு அறிவிக் காத நிலையில், மாநில அரசு அறிவிக்க அதிகாரம் இருந்தும் இதுவரை விவசாயிகளின் குர லுக்கு செவி சாய்க்காமல் உள் ளது. மேலும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட டன்னுக்கு ரூ.2,650 விலையையே புதிய கொள்முதல் விலை அறிவிக்கும்வரை செயல்படுத்தப் படும் என்று அறிவித்துள்ளதும் ஏற்புடையதாக இல்லை. ஒரு ஏக்கரில் சுமார் 40 டன் வரை கரும்பு உற்பத்தி செய்யலாம். ஆனால், அறுவடைக் காலம் தாமதமானால் அது 30 டன்னாக குறைந்துவிடுகிறது. இதனால், விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர்.
மேலும், ஒரு டன் கரும்பை உற்பத்தி செய்ய சுமார் ரூ. 3,500 வரை செலவிட வேண்டியுள்ளது. ஆனால், அரசின் கொள்முதல் விலை நஷ்டத்தை ஏற்படுத்து வதாக உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் நடப்பு அரவைப் பருவத்துக்கான கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு குறைந்தது ரூ. 3,500 என விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT