Last Updated : 30 Apr, 2014 12:02 PM

 

Published : 30 Apr 2014 12:02 PM
Last Updated : 30 Apr 2014 12:02 PM

அரசு போக்குவரத்துக் கழகத்தில் 80% டிக்கெட் இயந்திரங்கள் பழுது: தடுமாறும் நடத்துநர்கள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு உள்பட்ட 8 போக்கு வரத்து கழகங்களில் டிக்கெட் வழங்கும் 80 சதவீத இயந்திரங்கள் பழுதடைந்துவிட்டன. இதனால் டிக்கெட் இயந்திரம், டிக்கெட் நோட்டுகளையும் வைத்துக் கொண்டு வரவு கணக்கை முடிக்க முடியாமல் நடத்துநர்கள் தினமும் தடுமாறி வருகின்றனர்.

போக்குவரத்து கழகத்தை நவீனப்படுத்தும் விதமாகவும், நடத்துநர்களின் பணியை எளிமை யாக்கவும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப் பட்டன.

அப்போதைய, போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, இதற்கான பணிகளை மேற்கொண் டார். பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறு வனத்திடம் இருந்து 8 போக்கு வரத்து கழகத்துக்குத் தேவையான இயந்திரங்கள் தலா ரூ. 10,500-க்கு கொள்முதல் செய்யப்பட்டன.

இயந்திரங்கள் வாங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டதாலும், சரியாக பராமரிக்கப் படாததாலும் தற்போது, இயந் திரங்கள் பெரும்பாலும் பழு தடைந்து வருவதாக நடத்துநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது நடத்துநர்கள், டிக்கெட் இயந்திரத்தைக் காட்டிலும் டிக்கெட் நோட்டையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பணியை எளிமை யாக்குவதற்காக கொண்டு வரப் பட்ட டிக்கெட் இயந்திரம், அவர் களின் சுமையை கூட்டியுள்ளது மட்டுமே மிச்சமாகி உள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத கோவை கோட்ட அரசுப் பேருந்தின் நடத்துநர் ஒருவர் கூறும் போது, சுமார் 20 பயணிகளுக்கு இயந்திரம் மூலம் டிக்கெட் கொடுக் கும்போதே, இயந்திரத்தின் இயக் கம் நின்றுவிடுகிறது. நிலைமையை சமாளிக்க டிக்கெட் நோட்டையே அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.

நாங்கள் தொடர்ச்சியாக ஒரு இயந்திரத்தை பயன்படுத்த அனு மதிக்கப்பட்டால், எங்களது கை காசை செலவு செய்தாவது ரிப்பேர் செய்து கொள்வோம். ஆனால், இன்று எங்களுக்கு வழங்கப்படும் இயந்திரம், நாளை வேறு நடத்துநர்களுக்கு வழங்கப்படும். ஒரு வரைமுறை இன்றி இயந் திரத்தை பலபேர் பயன்படுத்து வதால், எங்களால் பழுது நீக்க முடியவில்லை. பழைய முறைப் படி டிக்கெட் கிழித்து கொடுப் பதையே முழுமையாகக் கொண்டு வந்தால் போதும் என்ற நிலை யில் உள்ளோம். பணி செய்ய முடிய வில்லை, மன உளைச்சல்தான் அதிகம் ஏற்படுகிறது என்றார்.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணியாளர் கள் சம்மேளனம் டி.வி.பத்மநாபன் கூறும்போது, பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம்தான் தமிழகத்தில் உள்ள 8 கழகங் களுக்கும் இயந்திரங்களை வழங்கி யது. ஆனால், அந்த இயந்திர வகை பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லை எனக் கூறி பெங்களூர் அரசு போக்குவரத்து கழகத்தால் நிராகரிக்கப்பட்டது. அதைத்தான் தமிழக போக்குவரத்து கழகங்கள் தெரிந்தும் கொள்முதல் செய்தன.

தற்போது, பெங்களூரில் நவீன இயந்திரத்தை கொண்டு வந்து விட்டனர். குறிப்பிட்ட பேருந்தில் எத்தனை பயணிகள், எவ்வளவு மொத்த வருவாய் என்பதை ஆன் லைன் மூலம் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க முடியும்.

ஆனால், தமிழகத்தில் தற்போ தைய நிலைப்படி சுமார் 80 சதவீத இயந்திரங்கள் பழுதாகி விட்டன. அவற்றை சரிசெய்யக்கூட கழகங் கள் சரியான நடவடிக்கை எடுப்ப தில்லை. இதனால் இயந்திரம், டிக்கெட் நோட்டு என இரண்டையும் பயன்படுத்தி கணக்கை முடிக்க முடியாமல் நடத்துநர்கள் தினமும் தடுமாறி வருகின்றனர்.

போக்குவரத்துத் துறையை நவீனப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள், முறைப் படுத்தப்படாததால் நடத்துநர்கள் திண்டாடி வருகின்றனர். உடனடி யாக, இயந்திரங்கள் புதுப்பிக்கப் படவில்லை எனில் நடத்துநர்கள் நிலை சிக்கலாகிவிடும். நடத்துநர் கள் மனஉளைச்சலில் வேலை செய் தால் பயணிகளும் மனஉளைச்ச லுக்கு உள்ளாக நேரிடும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x