Published : 22 Dec 2014 10:21 AM
Last Updated : 22 Dec 2014 10:21 AM

பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

ஈரோடு வட்டத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம்போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து 23.12.2014 முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் இரண்டாம்போக பாசனத்திற்காகவும், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம்போக பாசனத்திற்காகவும் நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஈரோடு வட்டத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஈரோடு வட்டத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம்போக பாசனத்திற்காக 23.12.2014 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது. இதனால், ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் இரண்டாம்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் இரண்டாம்போக பாசனத்திற்காக 23.12.2014 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம்போக பாசனத்திற்காக 23.12.2014 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2,396 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x