Published : 02 Dec 2014 09:54 AM
Last Updated : 02 Dec 2014 09:54 AM

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம்: அமைச்சர் பதில் சொல்லாதது ஏன்? - திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதாக கூறப்படும் புகார் குறித்து முதல்வரோ, துறை அமைச்சரோ பதில் சொல்லாதது ஏன் என்று திமுக தலைவர் கருணா நிதி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

தமிழகத்தில் மின்உற்பத்தி, மின்திட்டங்கள் குறித்து மின்துறை அமைச்சர் நீண்ட அறிக்கையை வெளியிட்டார். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்வாரியத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நேரடியாக தெரிவித்த நேரத்தில், மின்துறை அமைச்சர் அதற்கு எந்த பதிலும் கூறாமல், ஆணையத்தை மிரட்டுவதுபோல் அறிக்கை வெளி யிட்டிருந்தார்.

மின்உற்பத்தி மற்றும் மின் வெட்டு குறித்து சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த உறுதிமொழிகள்தான் எத்தனை? தற்போதைய நிலை என்ன? தமிழகத்தில் கடும்குளிரி லும் மின் தடை செய்யப்படுவது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி, வல்லூர் மூன்றா வது அலகில் வணிக மின்உற்பத்தி, கடந்த மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை உற்பத்தி தொடங்காததால், தமிழத் துக்கு 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை. நடப்பு நிதி யாண்டில், மின்சாரம் வாங்குவதற்கான செலவாக ரூ.27 ஆயிரத்து 147 கோடியை மின் வாரியம் மதிப்பிட்டுள்ளது. இதில், குறிப்பிட்ட 4 தனியார் மின் நிலையங்களுக்கு மட்டும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதனால், மின்வாரி யத்துக்கு கொள்முதல் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை சுமார் ரூ.22 ஆயிரத்து 90 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதில், தனியா ரிடம் இருந்து மட்டும் ரூ.16,280 கோடிக்கு மின்சாரம் வாங்கப் பட்டுள்ளது. இதுபற்றி அரசின் மீது புகார் கூறப்பட்ட போதிலும் அரசோ, முதல்வரோ, அத்துறை அமைச்சரோ பதில் அளிக்கவில்லையே. விரைவில் நடக்கவுள்ள ரங்கம் இடைத் தேர்தல் காரணமாகத் தான் மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வராமல் உள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எண்ணூர் அனல் மின் விரி வாக்கத் திட்டம், 2015-ம் ஆண்டு இறுதிக்குள் உற்பத் தியை தொடங்கும் என சட்டப்பேரவையில் 2012 மார்ச் 29-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தற்போது அந்தத் துறை அமைச் சரோ 2018-ல்தான் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கிறார்.

எந்த அளவுக்கு மின்உற்பத்தி யில் தமிழகம் தன்னிறைவு அடைவதற்கான நடவடிக் கைகளை அதிமுக அரசு எடுத்து வருகிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது அல்லவா?

‘நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் 2,000 மெகாவாட் திறன் கொண்ட சில்ல ஹல்லா நீரேற்று புனல் மின்திட்டம் உருவாக்கப்படும்’ என்று 2013 ஏப்ரல் 25-ம் தேதி பேரவை யில் ஜெயலலிதா தெரிவித்தார். அதன்பிறகு 18 மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால், மின்வாரிய தலைமைப் பொறியாளர் கொடுத் துள்ள அறிக்கையில் இத்திட்டத் துக்கான கொள்கை ரீதியிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஏமாற்று நாடகங்கள் இந்த ஆட்சியில் எப்படி அரங்கேற்றப்படுகின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x