Published : 10 Dec 2014 10:12 AM
Last Updated : 10 Dec 2014 10:12 AM
சென்னை பழவந்தாங்கலை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி ஸ்ரீதேவி (30). மகன் கிஷோர்(6). கணவர் பாலு வெளிநாட்டில் வேலை செய்கிறார். எனவே ஸ்ரீதேவி, மகன் கிஷோருடன், பழவந் தாங்கல் நேரு காலனியில் உள்ள தந்தை வீட்டில் தங்கி இருக்கிறார். நேற்று முன்தினம் காலையில் தனது தந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதற்காக தந்தையுடன் வீட்டைவிட்டு வெளியே வந்தார் ஸ்ரீதேவி.
அப்போது சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத் துக் கொண்டு ஊழியர் ஒருவர் வந்தார். அவர் வீட்டுக்குள் வந்து சிலிண்டரை மாற்றிவிட்டு காலி சிலிண் டரை எடுத்து தனது டிரை சைக்கிளில் வைத்துக் கொண்டிருந்தபோதே மகன் கிஷோரை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் ஸ்ரீதேவி.
இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த சிலிண் டர் நிறுவன ஊழியர், 6 வயது சிறுவன் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து சில நிமிடங்களில் மீண்டும் அதே வீட்டுக்கு வந்து சிறுவனிடம் பேச்சு கொடுத்து, பீரோவில் இருந்த 12 சவரன் நகை கள், ரூ.15 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த ஸ்ரீதேவியிடம் நடந்த விவரங்களை சிறுவன் கூற, பீரோவை திறந்து பார்த்தபோது நகை, பணம் திருடப்பட்டது தெரிந்தது.
கடையில் திருட்டு
சென்னை பழைய வண் ணாரப்பேட்டை கக்கன் தெருவை சேர்ந்தவர் அருண். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டை யார்பேட்டை தபால் நிலை யம் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக செல்போன் கடையை திறந்தார். நேற்று முன்தினம் காலையில் அருண் கடை யில் இருந்தபோது சுமார் 20 வயதுடைய பெண் ஒருவர் வந்து, தமது குடும்பம் மிகவும் கஷ்டமான நிலையில் இருப்பதாகவும், பட்டப்படிப்பு முடித்துள்ள தனக்கு வேலை தருமாறும் கேட்டார்.
அந்த பெண் மீது பரிதாபப் பட்ட அருண் உடனடியாக அவரை வேலைக்கு சேர்த்துக்கொண்டார். அன்று மதியம் அந்த பெண்ணை கடையில் விற்பனையை கவனிக்கும்படி கூறிவிட்டு அருண் வீட்டுக்கு சாப்பிடச் சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்தபோது கடை காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், பணப்பெட்டி யில் இருந்த ரூ.4 ஆயிரம், ரீசார்ஜ் கூப்பன் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் திருடப்பட்டிருந்தன. அந்த பெண்ணையும் காணவில்லை. வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அனைத்து பொருட்களையும் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டார் அந்த பெண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT