Published : 21 Dec 2014 09:30 AM
Last Updated : 21 Dec 2014 09:30 AM

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: 4,963 பணியிடங்களுக்கு 12.72 லட்சம் பேர் போட்டி

தமிழகம் முழுவதும் 4,488 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு இன்று நடக்கிறது. மொத்தமுள்ள 4,963 இடங்களுக்கு 12.72 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த அக்டோபரில் அறிவித்தது. இளநிலை உதவியாளர் (2071 பேர்), வரித் தண்டலர் நிலை-1 (22), தட்டச்சர் (1683), சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 (331), நில அளவர் (702), வரைவாளர் (53) உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 4,963 இடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக் கப்பட்டது. குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது. நேர் முகத் தேர்வு கிடையாது. கல்வி மற்றும் தொழில்நுட்ப சான்றி தழ்கள் சரிபார்ப்பு முடிந்தவுடனே வேலை கிடைத்துவிடும் என்பதால் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரையில் ஆர்வமாக விண்ணப்பித்தனர்.

அத்துடன், அந்தந்தப் பகுதிகளில் உள்ள பயிற்சி மையங்களிலும் சேர்ந்து படித்து வந்தனர். இந்தத் தேர்வுக்கு 13 லட்சத் துக்கு மேற்பட்டோர் விண்ணப் பித்தனர். உரிய கல்விச் சான்றிதழ், சாதி மற்றும் தொழில்நுட்ப படிப்பு சான்று உள்ளிட்டவை இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டன. இறுதியாக 12 லட்சத்து 72 ஆயிரத்து 298 பேர் தேர்வு எழுத தகுதியுடையோராக இறுதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 4,488 மையங்களில் இன்று தேர்வு நடக்கிறது.

சென்னையில் மட்டும் 263 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை தேர்வு நடக்கும். மொத்தம் 300 மதிப்பெண்களைக் கொண்டதாக வினாத்தாள் அமைக் கப்பட்டிருக்கும். பொது அறிவு பாடப்பிரிவில் 100 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து தலா 100 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண் உண்டு. அனைத்து தேர்வு மையங் களுக்கும் வினாத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்வுத் தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வுப் பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களை நேரில் சென்று பார்வையிட சிறப்பு அலுவலர்களைக் கொண்ட 150-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 1000 பேருக்குமேல் எழுதும் தேர்வு மையங்களில் தேர்வு முழுவதும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படுகிறது. தேர்வு மையங் களுக்குள் செல்போன், கால்கு லேட்டர் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x