Published : 03 Dec 2014 10:24 AM
Last Updated : 03 Dec 2014 10:24 AM

திருவள்ளூரில் ஹெச்ஐவி தொற்று 0.2 சதவீதமாக குறைந்தது

திருவள்ளூர் மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி., தொற்று உள்ளவர்க ளின் எண்ணிக்கை 0.2 ஆக குறைந் துள்ளதாக மாவட்ட ஆட்சி யர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (மற்றும்) கட்டுப்பாடு அலகு சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில், ஆட்சியர் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பிறகு, வாழ் வியல் திறன் கல்வி தொடர்பாக நடந்த பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, ஹெச்ஐவி தொற்றுள்ள 56 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் தொற்று பாதித்த இருவருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். பின்னர் நடந்த சமபந்தி போஜனத்தில் ஹெச்ஐவி தொற்றுள்ளவர்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்களுடன் உணவருந்தினார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலு வலர் பிரபாகரன், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மருத்துவர் மோகனன் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

முன்னதாக ஆட்சியர் பேசும் போது, ‘ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இதிலி ருந்து தன்னை மீட்டெடுக்க தன்னம்பிக்கை, உடற் பயிற்சி, மன உறுதியோடு சத்தான உணவு, மருந்துகள் சாப்பிடுவ தால், சாதாரண மனிதர்களைக் காட்டிலும் உடல் ஆரோக்கிய முடன் வாழ்ந்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 2007-ல் தொடக்கத்தில் 0.6 சதவீதமாக இருந்த தொற்று, 2013-ல் 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதை முற்றிலுமாக ஒழிப்போம். ஹெச்ஐவி இல்லாத, புறக்கணித் தல் மற்றும் ஒதுக்குதல் இல்லாத தமிழகத்தை உருவாக்க உறுதி யேற்று செயல்படுவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x