Published : 28 Dec 2014 10:27 AM
Last Updated : 28 Dec 2014 10:27 AM
பொக்கிஷ மலை மற்றும் டாமின் குவாரிகளில் பல லட்சம் கியூபிக் மீட்டர் அளவில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து பதுக்கி வைத்திருந்த குவாரி அதிபர்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சகாயத்தின் ஆய்வில் தெரியவந்தது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் 3-ம் கட்ட விசாரணையை நேற்று முன்தினம் தொடங்கினார்.
சனிக்கிழமை கீழவளவு பொக்கிஷ மலையை சகாயம் ஆய்வு செய்தார். 71 ஏக்கரில் ஒரு கிலோ மீட்டர் வரை நீண்ட பொக்கிஷ மலையை கேக் போல் வெட்டி கிரா னைட் கல் எடுத்து விற்றுவிட்டனர். 1993 முதல் 20 ஆண்டுகளுக்கு பிஆர்பியின் உறவினர் டாமினில் ஒப்பந்தம் செய்து இந்த மலையில் 3.81 லட்சம் கியூபிக் மீட்டருக்கும் மேல் கற்களை வெட்டியுள்ளனர்.
18 பட்டி கிராமத்தினரும் சென்று வரும் இந்த மலைக்கு மேல் உள்ள சர்க்கரைபீர் தர்ஹா, கரைய கருப்பன் கோயிலுக்கான பாதை அழிக்கப்பட்டுவிட்டன. இதை எதிர்த்து மனு கொடுத்ததால் போலீ ஸார் கைது செய்ததாகவும், அதிகாரி கள் துணையோடுதான் இவ்வளவும் நடந்தது என்பதும் சகாயத்தின் ஆய்வில் தெரியவந்தது.
பொதுப்பணித் துறைக்கு சொந் தமான 47 ஏக்கர் சிரமாணிக்கம் கண்மாயில் பல்லவா கிரானைட் நிறுவனத்தினர் கழிவுக் கற் களை கொட்டி முற்றிலும் அழித்திருந்தனர். இதனால் பல கண்மாய்களுக்கு 5 ஆண்டுகளாக தண்ணீரே செல்லா மல் பல நூறு ஏக்கர் பாசன நிலம் மேடாகிவிட்டது.
இவ்வளவு அத்துமீறல்கள் நடந்திருந்தும். ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டிய வருவாய் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மாறாக கற்களை கொட்டிய இடத்தை குவாரி தரிசு, பாறை பகுதி, கல் பகுதி என ஆவணங்களில் மாற்றியிருந்தனர். இதுகுறித்து சகாயம் வேறு ஏதும் விதிமீறல் உள்ளதா எனக் கேட்போது, அதிகாரிகள் மவுனம் காத்ததால், விதிமீறல்குறித்து சான்றிதழாக அளிக்க வேண்டும். வேறு புகார்களை மக்கள் அளித்தால் அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
குடியிருப்பு பகுதியில் குவாரி
கீழவளவு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில், 200 அடி பள்ளம் தோண்டி கற்கள் வெட்டப்பட்டிருந்தன. இந்த இடத்தை ஆய்வு செய்தபோது அதிகாரிகள் அளித்த பதிலால் சகாயம் அதிர்ச்சியடைந்தார். குறிப்பிட்ட இடம் கிராம நத்தமாக இருந்தது. இதுபோன்று இருந்தால் அங்கு மக்கள் வீடுகளை கட்ட பட்டா வழங்க வேண்டும். இதை அழித்து பிஆர்பி நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டியுள்ளது. இந்த விதிமீறல் குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து முழு அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆர்டிஓ. செந்தில்குமாரிக்கு சகாயம் உத்தரவிட்டார்.
அதிகாரிகள் மீது புகார்
ஆய்வின் இடையிடையே பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், பல்வேறு துறை அதிகாரிகள் புகார்கள் அளித்தனர். இன்னும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை பிஆர்பி நிறுவனம் வாங்கி குவித்துள்ளது. இந்த இடத்தில் குவாரி நடத்த அனுமதி பெற்றும் இதுவரை தோண்டவே இல்லை. மாறாக, அரசு நிலம், மலைகள், கண்மாய்கள், பாதை, மயானம், கால்வாய் என சிக்கிய இடங்களில் எல்லாம் கற்களை வெட்டி தங்கள் இடத்தில் அடுக்கி வைத்துள்ளனர்.
இப்படி அனைத்து முறைகேடுகளுக்கும் வருவாய், டாமின், கனிமவளம், காவல்துறை என அனைத்து துறையினரும் போட்டி போட்டு உதவினர். இதற்காக பல ஆண்டுகளாக தலையாரிக்கு ரூ.ஆயிரம், விஏஓவுக்கு ரூ.5 ஆயிரம், வருவாய் ஆய்வாளருக்கு ரூ.10 ஆயிரம், வட்டாட்சியர், கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம், மற்றும் ஆட்சியர் வரையிலும், காவல் துறையில் ஆய்வாளர், துணை கண்காணிப்பாளர் வரை அனைவருக்கும் மாதந்தோறும் பணம் வழங்கப்பட்டுள்ளது. இத னால் குவாரி அதிபர்களுக்கு சாதக மாகவே நடந்து கொள்கின்றனர் என கீழவளவு பஞ்சாயத்து தலைவர் தர்மலிங்கம் உட்பட பலரும் சகாயத்திடம் குற்றம்சாட்டினர்.
கோட்டாட்சியர் செந்தில்குமாரி, கனிமவளத் துறை உதவி ஆணையர் ஆறுமுகநயினார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராம கிருஷ்ணன், தாசில்தார் மணிமாறன் உட்பட பல்வேறு துறை அதிகாரி கள் சகாயத்துடன் சென்றனர். காவல் துணை கண்காணிப்பாளர் அலெக்ஸ் தலைமையில் 100 போலீஸார் பாதுகாப்புக்கு வந்தனர். மேலும் 2 நாட்கள் நேரடி ஆய்வு நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT