Published : 19 Dec 2014 10:12 AM
Last Updated : 19 Dec 2014 10:12 AM
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் மெக்கானிக்கல் பொறியாளர் கல்வித் தகுதி கொண்டவர்களிடம் தொடர்பில்லாத உயர் பொறுப்புகள் வழங்கப்படுவதால் மாநிலம் முழுக்க உள்ள சாலைகளின் தரம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு, தரக்கட்டுப்பாடு, தேசிய நெடுஞ்சாலை (மாநில நெடுஞ் சாலைத் துறையின் கீழ் இப்பிரிவு இயங்குகிறது) என 3 பிரிவுகள் உள்ளன. முந்தைய காலங்களில் அவசர சூழல் உள்ளிட்ட முக்கிய நேரங்களில் நெடுஞ்சாலைத் துறையே நேரடியாக இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. இடையில் இந்த முறை முற்றிலும் கைவிடப் பட்டுவிட்டது.
மாறாக, நெடுஞ்சாலைத் துறை யின் அனைத்து பணிகளும் ஒப்பந்த தாரர்களைக் கொண்டே செய்து முடிக்கப்படுகிறது. பழைய நடைமுறை செயல்பாட்டில் இருந்தபோது அதற்கான இயந்தி ரங்கள் பராமரிப்பு, இயந்திரவியல் பிரிவு, பணி மனைகள் நிர்வாகம் ஆகியவையும் நெடுஞ்சாலைத் துறை மூலமே மேற்கொள்ளப் பட்டன. இதற்கென 1998-ம் ஆண்டில் பி.இ. மெக்கானிக்கல் முடித்தவர்கள் 20 பேர் மாநிலம் முழுக்க உதவிப் பொறியாளர்களாக பணியமர்த்தப்பட்டனர். பின்னர் அவர் களின் எண்ணிக்கை 30 ஆனது.
ஏற்கெனவே நெடுஞ்சாலைத் துறையில் சிவில் முடித்த 720 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் இருந்த நிலையில் இவை கூடுத லாக உருவாக்கப்பட்டன. நெடுஞ் சாலைத் துறையே நேரடியாக சாலை அமைக்கும் முறையை கைவிடப் பட்ட பிறகு, மெக்கானிக்கல் கல்வித் தகுதியுடன் பணியமர்த்தப்பட்ட வர்களுக்கு வேலையே இல்லை என்ற நிலை உருவானது. இயந்திரப் பிரிவுகளும் பயன்பாடற்று கிடப் பில் போடப்பட்டன.
எனவே 2007-ம் ஆண்டுடன் நெடுஞ்சாலைத் துறையில் மெக்கா னிக்கல் முடித்தவர்களை நியமிக் கும் நடைமுறையும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே பணியில் சேர்ந்த (மெக்கானிக்கல்) உதவி பொறியா ளர்கள் தற்போது பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெற்று மேற்பார்வை பொறியாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் அமர்ந் துள்ளனர். சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குறித்த கல்வித் தகுதி இல்லாதவர்கள் இதுபோன்ற பணிகளில் அமர்வதால் மாநிலம் முழுக்க சாலைகளின் தரம் கேள்விக் குறியாகி வருகிறது என சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் சிலர் கூறியதாவது: “சிவில் பொறியாளர் பணி களுக்கு தொடர்பே இல்லாத, மெக்கானிக்கல் தகுதி கொண்ட வர்களின் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்ப டும் பணிகளில் தரமின்மை சூழல் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை சாலைகளின் தரம் பாதிக்காமல் இருக்கவும், சிவில் தகுதியு டன் பணிக்கு வந்தவர்களின் பதவி உயர்வு பாதிக்காமல் இருக்கவும் இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.
உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும்
ஹெச். ஷேக் மைதீன்
பொறியாளர்களின் பதவி உயர்வு தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை தலைமையிட அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: மெக் கானிக்கல்துறையில் தேவைக்கு அதிகமாக பொறியாளர்கள் இருந்ததால், பெரும்பாலும் ஆட்கள் தேர்வின்போது, மெக்கானிக்கல் படித்தவர்களே விண்ணப்பித்து வரும் நிலை இருந்தது. இதனால் பொறியாளர்கள் இல்லாத பிரச்சினையைப் போக்க மெக்கானிக்கல் துறை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் சிவில் துறை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு, சிவில் துறை பொறியாளர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்தது. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறையில் சிவில் பொறியாளர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். மெக்கானிக்கல் பொறியாளர்கள் தேர்வு செய்யப் படுவதில்லை. இந்த பத்தாண்டு காலத்தில் நியமனம் பெற்றுள்ள சிவில் பொறியாளர்கள், அரசின் விதிப்படி உரிய நேரத்தில் பதவி உயர்வு பெறுவர். இதில் மெக்கானிக்கல், சிவில் என்ற பாரபட்சம் ஏதும் இல்லை என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT