Published : 21 Apr 2014 09:46 AM
Last Updated : 21 Apr 2014 09:46 AM
ஆம்னி ஏசி பஸ்களில் பயணிகளுக்கு பாதுகாப்பை மேம்படுத்தும் வகை யில், புகை வந்தால் அலாரம் அடிக்கும் சென்சார்கள், அவசர நேரத்தில் தானாகவே திறக்கும் ஜன்னல் உள்ளிட்ட வசதிகளை கொண்டுவர வேண்டும் என்று ஆம்னி பஸ் தயாரிப்பு நிறுவனங் களை போக்குவரத்து துறை வலியுறுத்தியுள்ளது.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந் துள்ளது. இதன் அடிப்படையில் போக்குவரத்து சேவையும் அதிகரித் துள்ளது. அதிலும் சொகுசாக பயணம் செய்ய விரும்பும் மக்கள் ஆம்னி ஏசி பஸ்கள், படுக்கை வசதி கொண்ட பஸ்களில் ஆர்வமாக பயணிக்கின்றனர். கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, மதுரை, நெல்லை, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மட்டும் தினமும் சுமார் 1,500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னையில் இருந்து மட்டுமே பல்வேறு இடங்களுக்கு தினசரி 800 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 400க்கும் மேற்பட்ட ஏ.சி பஸ்களும் அடங்கும்.
அதே நேரத்தில் ஆம்னி பஸ் களில் அடிக்கடி நடந்து வரும் தொடர் விபத்துகள் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற் படுத்தியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆம்னி பஸ்களில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக நடந்த முக்கிய கூட்டத்தில் பஸ் புறப்படும் முன்பு, பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வீடியோவை கட்டாயம் திரையிட வேண்டும்., நீண்டதூர பஸ்களில் 2 டிரைவர்கள் இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், ஏசி ஆம்னி பஸ்களில் சாதாரண புகை வந்தாலே அலாரம் அடிக்கும் வகையில் சென்சார் தொழில்நுட்பம் அமைக்க வேண் டும், விபத்து நேரத்தில் கண்ணாடி ஜன்னல்கள் தானாகவே திறக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று வால்வோ, லை லேண்ட் உள்ளிட்ட நிறுவனங்களை வலியுறுத்தியுள் ளோம். இதன்அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக அந்த நிறு வனங்கள் உறுதியளித்துள்ளன. இதுதவிர, ஆம்னி பஸ்கள் மீது பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான சோதனையும் நடத்தப்பட்டு வருகி ன்றன’’ என்றனர்.
அகில இந்திய ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜே.எம்.பாண்டியனிடம் கேட்ட போது, ‘‘கோடை விடுமுறை தொடங்கி யுள்ள நிலையில், ஏசி பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே, டிரைவர்களுக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்து வருகிறோம். மேலும், ஆம்னி ஏசி பஸ்களில் பயணிகளுக்கு பாது காப்பு மேம்படுத்தும் வகையில், பஸ்ஸில் பயணிகளுக்கு ‘அலாரம் அலர்ட்’, அவசர நேரத்தில் தானாகவே திறக்கும் ஜன்னல் உள்ளிட்ட வசதியை பஸ் தயாரிப்பு நிறுவனங் கள் கொண்டுவர உள்ளன. இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஆம்னி ஏசி பஸ்கள் 2015-ல் வரும் என எதிர்பார்கிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT