Published : 04 Dec 2014 10:04 AM
Last Updated : 04 Dec 2014 10:04 AM

மாற்றுத்திறனாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட நடமாடும் சிகிச்சை வாகனம் வருவது எப்போது? - விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

மாற்றுத் திறனாளிகளுக்கென அரசு அறிவித்த நடமாடும் சிகிச்சை வாகனத்தை, விரைவில் செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் 6 வயது வரை உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் செவித்திறன் குறையுள்ள குழந் தைகளுக்கென 32 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களும் பார்வை திறன் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை களுக்கென 18 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில், சிகிச்சை பெறு வதற்காக பேருந்து மூலம் வருபவர் களுக்கு அரசின் மூலம் பயண சலுகை வழங்கப்பட்டா லும், இந்த மையங்களில் முழு அளவிலான சிகிச்சை பெற முடியாமல் மாற்று திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2013ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக் கென 32 நடமாடும் சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் 110வது விதியில் அறிவித்தார். ஆனால் ஓர் ஆண்டு கடந்த பின்னும் இத்திட்டம் செயல் பாட்டுக்கு வரவில்லை.

இதனால், நடமாடும் சிகிச்சை பிரிவுக்கான வாகனங்களை விரை வாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் வாசுதேவன் கூறிய தாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு உதவிதொகை பெற்று வருகின்றனர். இவர்கள், மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. பல்வேறு இடர்பாடு களால் உறவினர்கள் மருத்துவ மனைக்கு அழைத்து வருவதில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், மனதளவில் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, விரைவில் இத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து, மாற்று திறனாளிகள் நலத்துறை வட்டாரங் கள் கூறியதாவது: நடமாடும் சிகிச்சை பிரிவுக்காக, 108 ஆம்புலன்ஸ் வடிவிலான 32 வாகனங்கள் வாங்கப்பட்டுள் ளன. இவற்றில், மாற்றுத்திறனாளி களுக்கென பிரத்யேக சிகிச்சை கருவிகள் மற்றும் அவர்கள் வாக னத்தில் ஏறி, இறங்கும் வகையி லான அடிப்படை அமைப்புகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 20 வாகனங் களின் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன.

மேலும், இந்த வாகனங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், சுழற்சி முறையில் சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்துவதா அல்லது கிராமப்பகுதிக்கு சென்று மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளிப்பதா, குறைபாடுகளுக்கு ஏற்றவாறு ஒருநாள் என சிகிச்சை அளிப்பதா என்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் சுமார் 75 சதவித பணிகள் முடிக்கப்பட்டுள்ளதால், விரைவில் மாற்றுதிறனாளிகளுக்கென நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x