Published : 06 Dec 2014 06:29 PM
Last Updated : 06 Dec 2014 06:29 PM

தமிழக மீனவரை விடுதலை செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்: இலங்கை அமைச்சர்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என இலங்கை அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டம் முதலமடை கிராமத்தில் சினேகம் ஆசிரமத்தை நடத்தி வருகிறார் சுவாமி சுனில்தாஸ். இவரை சந்தித்து ஆசி பெறுவதற்காக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொ­லைத்­தொ­டர்பு, தகவல் தொழில்­நுட்ப இணையமைச்சருமான பிரபா கணேசன் கேரளா வந்தார். சனிக்கிழமை ராமேசுவரம் மீனவர் பிரதிநிதி தேவதாஸ் தலைமையில் இலங்கை அமைச்சர் பிரபா கணேசனனை சந்தித்து தமிழக மீனவர்கள் மீனவர்கள் சார்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 82 படகுகள், யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 38 தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் மீனவர்கள் சார்பில் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இலங்கை அமைச்சர் பிரபா கணேசன் கூறியதாவது,

இந்தியா வம்சாவளிசைச் சார்ந்தவன் என்ற அடிப்படையில் தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிப்பது தொடர்பாக எமக்கும் கடமை உள்ளது. தமிழக மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக நான் கொழும்பு சென்றதும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பேசிய பிறகு முடிவு விரைவில் அறிவிக்கப்படும். இந்திய-இலங்கை இரு நாட்டு அரசுகளும் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும், என்றார்.

மேலும் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்களை இலங்கையில் அனுமதித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது எதார்த்தமாக நடைபெற்ற விடயம் எனவும், இலங்கையில் சீனாவின் முதலீடு அதிகரித்து இருப்பதாகவும் இதனால் இந்திய-இலங்கை உறவில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் பிரபாக கணேசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x