Published : 20 Dec 2014 10:01 AM
Last Updated : 20 Dec 2014 10:01 AM
பட்ஜெட் வீடுகளுக்கான பிரத்யேக கண்காட்சி சென்னை டிரேட் சென்டரில் இன்றும் நாளையும் (டிச. 20.21) நடைபெறுகிறது.
100-க்கும் மேற்பட்ட பில்டர்கள், ஃபிளாட் புரமோட்டர்கள் இதில் பங்கேற் கின்றனர். காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும்.
இதுகுறித்து இக்கண்காட்சியை நடத்தும் பிராம்ப்ட் டிரேட் ஃபேர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ.உதயகுமார் கூறும்போது, “எளிய பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல் வீடு வாங்குவதற்காக தேடிக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப் பாகும்.
இந்த புத்தாண்டில் புது வீட்டில் வசிக்கக் கூடிய சாத்தியம் சாமானிய மக்களுக்கும் கிடைக்கும். அந்த அளவுக்கு குறைந்த விலையில் வீடுகளின் விலை அமைந் திருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான புராஜெக்ட்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஃப்ளாட்டுகளை யும், வில்லாக்களையும் ஒரே சமயத்தில் பார்வையிட்டு தங்களுக் கேற்ற ஃபிளாட்டுகளை தேர்வு செய்யலாம். வீட்டுக் கடன் வங்கி நிறுவனங்களிடமிருந்து ஆலோசனை பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT