Published : 22 Dec 2014 08:35 AM
Last Updated : 22 Dec 2014 08:35 AM

சமூக விரோதிகள் நுழையாமல் தடுக்க பள்ளிகளுக்கு பாதுகாப்பு விதிகள்

பள்ளிக்குள் சமூக விரோதிகள் நுழையாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும், மாநில அரசின் சார்பில் பாதுகாப்பு விதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் பள்ளிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தாலி பான் தீவிரவாதிகள், அங்கிருந்த மாணவர்களை சுட்டுக் கொன்றனர். இந்தக் கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர் பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது:

பள்ளி வளாகத்திலோ அல்லது அருகிலோ வெடிபொருள் போன்ற சந்தேகப்படும்படியான பொருள் கண்டுபிடிக்கப்பட்டால், அதைத் தொடவோ, அருகில் செல்லவோ கூடாது என மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்த வேண்டும்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறை, உள்ளூர் போலீஸ் நிலையம் ஆகிய வற்றின் தொலைபேசி எண்களை மாணவ, மாணவிகளுக்கு தெரியும் இடத்தில் எழுதி வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் மூன்று முதல் நான்கு நுழைவு வாயில்களுடன் கூடிய கான்கிரீட் சுற்றுச்சுவர் இருக்க வேண்டும். சுவரேறி குதித்து யாரும் வரமுடியாதபடி சுற்றுச்சுவர் மீது இரும்பு கம்பி வேலி அமைக்கலாம். சுற்றுச்சுவர் பகுதியில் இரவிலும் விளக்கு எரியுமாறு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நுழைவு வாயிலி லும் குறைந்தபட்சம், மூன்று பாது காவலர்கள் இருக்க வேண்டும். பாதுகாப்பாளர்கள் 24 மணி நேர மும் பணியில் இருக்க வேண்டும்.

சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க சுற்றுச் சுவர் மீதும், பள்ளிக்கூடத்தின் உள்ளே சில இடங்களிலும் கண் காணிப்பு கேமராக்களை பொருத்தி, அதன் பதிவுகளை கணினியில் சேமித்து வைக்க வேண்டும்.

ஆயுதம் தாங்கிய சமூக விரோதிகள் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து, ஆசிரியர்களையோ, மாணவர்களையோ பணயக் கைதி யாக பிடித்து வைத்தால், உடனடி யாக அதுபற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் அவரவர் வகுப்பறை களில் இருக்கவேண்டும். வராண்டா வில் நின்று கொண்டிருப்பவர் கள் அருகில் உள்ள அறைகளுக்கு செல்ல வேண்டும். அவசரப்பட்டு தப்பி ஓடும் முயற்சியாக வாசல் கதவை நோக்கி ஓடக்கூடாது.

வகுப்பறைக்குள் இருப்பவர்கள் கதவை உட்புறமாக பூட்டிக்கொள்ள வேண்டும். சமூக விரோதிகள் துப்பாக்கியால் சுட்டால் தரையில் படுத்துக்கொள்ள வேண்டும்.

சமூக விரோதிகள் இருக்கும் இடம் தெரிந்துவிட்டால், பாதுகாப் பான நுழைவு வாயில் வழியாக மாணவர்கள் அமைதியாக வெளி யேற ஏற்பாடு செய்ய வேண்டும். கதவுகளை மூடவேண்டும்.

பள்ளிக்கூடம் முடிந்து குழந்தை கள் வெளியேறும்போது நுழைவு வாயில் அருகே தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டால், குழந்தை களை உடனடியாக பள்ளி வளாகத் துக்குள் வரச்சொல்லி கதவை இழுத்து மூடவேண்டும். எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்து அனைத்து நுழைவு வாயில்களின் கதவுகளையும் மூடச் செய்ய வேண்டும்.

நுழைவு வாயிலில் நிற்கும் பாது காவலர்கள், நம்பிக்கையான நபர் களை மட்டுமே பள்ளிக்கூடத்துக் குள் அனுமதிக்க வேண்டும். யாரா வது அத்துமீறி நுழைய முயன்றால், அவர்களைத் தடுப்பதுடன் போலீஸுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் கட்டுப்பாட்டு அறை, உள்ளூர் போலீஸ் நிலையம் ஆகியவற்றின் தொலைபேசி எண்களை மாணவ, மாணவிகளுக்கு தெரியும் இடத்தில் எழுதி வைத்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x