Published : 16 Dec 2014 10:14 AM
Last Updated : 16 Dec 2014 10:14 AM
சிபிஎஸ்சி மற்றும் நவோதயா பள்ளி களில் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி
பாஜக அரசின் நடவடிக் கைகள் நாளுக்குநாள் விபரீதத்தை ஏற்படுத்துவதாகவும், வேதனையைத் தருவதாக வும்தான் உள்ளன. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்து மகாசபைத் தலைவர் மதன்மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்த நாளை ‘நல்லாட்சி தினம்’ என்ற பெயரில் டிசம்பர் 25-ம் தேதி, அதாவது கிறிஸ்துமஸ் நாளன்று கொண்டாடுவதற்கு முன்வந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதையொட்டி, மத்திய அரசு சிபிஎஸ்இ பள்ளிகள் அன்றைய தினம் கட்டுரைப் போட்டிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது. மத்திய அரசு, தானே நடத்துகின்ற ‘நவோதயா வித்யாலயா’ பள்ளிகளுக்கு இதை சுற்றறிக்கையாக அனுப்பி, டிசம்பர் 24, 25 ஆகிய நாட்களில் கட்டுரைப் போட்டி நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதை மாணவர்கள் கொண்டாட முடியாத ஒரு நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நாகரிகத்தைச் சிதைத்திட முனையும் இத்தகைய பிரச்சினைகளில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு, இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், எதிர் காலத்தில் இதுவே பெரிய வரலாற்றுப் பிழையாகிவிடும்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்)
டிசம்பர் 25-ம் தேதியை நல் ஆளுமை நாளாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி மத்திய இடைநிலை கல்வி வாரியப் பள்ளிகளில் டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய நம்பிக்கையின்படியான கொண்டாட்டத்தை கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)
நவோதயா பள்ளிகளில் வாஜ்பாய் மற்றும் மதன்மோகன் மாளவியா பிறந்தநாளை நல்லாட்சி தினமாக அறிவிக்க இருப்பதாகவும், இதற்காக டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது அநீதியான செயலாகும். கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்புவதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்)
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகா சபா தலைவர் மதன்மோகன் மாளவியாவின் பிறந்த நாளை ‘நல்ல ஆளுமை’ தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் தின விடுமுறையை ரத்து செய்துவிட்டு அன்றைய தினம் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி போன்றவற்றை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, காலம்காலமாக கட்டிக்காக்கப்பட்டு வரும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக் கும் முயற்சியாக உள்ளது.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்)
டிசம்பர் 25-ம் தேதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபாவின் தலை வராக இருந்த மதன்மோகன் மாளவியா ஆகியோரது பிறந்த நாளையொட்டி மத்திய அரசால் நடத்தப்படும் நவோதயா பள்ளி களில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது கடும் கண்டனத் துக்குரியது. இந்த சுற்றறிக்கையை மத்திய அரசு விலக்கிக்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT