Last Updated : 12 Dec, 2014 11:27 AM

 

Published : 12 Dec 2014 11:27 AM
Last Updated : 12 Dec 2014 11:27 AM

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு எப்போது? - செயல்பாட்டுக்கு வராத அமைச்சரின் அறிவிப்பு

கடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சட்டப்பேரவையில் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட சலுகையை செயல்படுத்த வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி படித்த லட்சக்கணக்கானோர் அரசின் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்வதை எளிமைப் படுத்தும் விதமாக வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லாமல் அந்தந்த கல்வி நிறுவனங்கள், தனியார் இணையதள மையங்களிலும் பதிவுசெய்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய வசதிகள் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் ஏராளமானோர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவு புதுப்பிப்பதை தவறவிட்டுள்ளனர்.

இவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,931 பெண்கள் உட்பட மொத்தம் 5,137 பேர் பதிவை புதுப்பிக்கத் தவறியுள் ளனர். இதேபோல, தமிழகத்தில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று பதிவை தவற விட்டவர்கள் மீண்டும் பதிவை புதுப்பித்தால் மட்டுமே அரசின் வேலைவாய்ப்புகளை எதிர் பார்க்க முடியும்.

பாதிக்கப்பட்டோருக்கு அவ் வப்போது அரசு சலுகை அளித்து வருகிறது. அதன்படி, கடந்த 2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப் பிக்கத் தவறியவர்களுக்கு 2014-15-ம் ஆண்டில் சலுகை அளிக்கப்படும்.

இதன்மூலம் தமிழகத்தில் ஒரு லட்சம் பதிவாளர்கள் பயன் பெறுவார்கள் என்று கடந்த ஜூலை 11-ம் தேதி பேரவையில் வேலைவாய்ப்பு மானியக் கோரிக் கையில் அத்துறையின் அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.

ஆனால், 5 மாதங்கள் கடந்தும் அமைச்சரின் அறிவிப்பு செயல்படுத்தப்படாததால் அரசு அறிவித்து வரும் வேலை வாய்ப்புகளை பெறமுடியாமல் தவறவிட்டுள்ளதாக பாதிக்கப் பட்டுள்ள பதிவுதாரர்கள் கூறு கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினர் கூறும்போது, “இதற்கான உத்தரவு எங்களுக்கு வரவில்லை. தினமும் இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உத்தரவு வந்ததும் பதிவு செய்யப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x