Published : 24 Dec 2014 10:34 AM
Last Updated : 24 Dec 2014 10:34 AM
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனைகள் நடக்கின்றன.
இயேசு கிறிஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25-ம் தேதியை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலியுடன் பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜொலிக்கும் தேவாலயங்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி அனைத்து தேவாலயங் களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிக்கின் றன. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் வேளாங் கண்ணி அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத்தில் இன்று இரவு சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுத் திருப்பலி நடக்கிறது.
இன்று இரவு 11 மணியில் இருந்து பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் தொடங்குகிறது. விண்மீன் ஆலயத்தில் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் தலைமையில் நள்ளிரவு சிறப்பு கூட்டு திருப்பலி தொடங்குகிறது. தமிழ், ஆங்கிலம் உட்பட ஐந்து மொழிகளில் திருப்பலி நடக்கிறது. உலக சமாதானத்துக்காகவும், உடல் நலம் பெற வேண்டியும், இந்தியாவின் நலனுக்காகவும் இப்பிரார்த்தனை நடத்தப்படு கிறது.
நள்ளிரவில் திருப்பலி ஆராதனை
நாளை கிறிஸ்துமஸ் தினத் தன்று காலை 8 மணி முதல் கிறிஸ்துமஸ் தின கூட்டு திருப்பலிகள் நடக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு மொழி வீதம் 5 மொழிகளில் தொடர்ந்து திருப்பலி நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கிறிஸ்தவர்கள் வேளாங் கண்ணியில் குவிந்து வருகின்றனர்.
சென்னை சாந்தோம் தேவால யத்தில் மயிலை கத்தோலிக்க உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு தமிழில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியும் ஆராதனையும் நடக்கிறது.
இரவு 9.30 மணிக்கு ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடக்கும். இதேபோல், கிறிஸ்துமஸை முன்னிட்டு சிஎஸ்ஐ உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் ஆலயங்களிலும் இரவு ஆராதனை நடக்கிறது. அதேபோல, நாளை காலை அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பு பிரார்த்தனையும் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT