Published : 10 Apr 2014 01:01 PM
Last Updated : 10 Apr 2014 01:01 PM
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும் 13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003-ன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் கடைகள், அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகள் மற்றும் ஓட்டல்களில் மதுக்கூடங்கள் அனைத்தும், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 13-ம் தேதியன்று மூடப்பட வேண்டும்.
இத்தகவலை, ஆட்சியர் வீரராக ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT