Published : 20 Dec 2014 09:40 AM
Last Updated : 20 Dec 2014 09:40 AM
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் தட்டார்மடத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் எஸ். இன்பராஜ். இவர் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதனுக்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘என் மனைவி லீமா ரோஸூக்கும், சுற்றுலா அமைச்சர் சண்முகநாதனுக்கும் தொடர்பு உள்ளதால், நான் மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். இந்த நிலையில், லிமாரோஸூக்கு எனது சொத்தில் பங்கு வழங்குமாறு நவ. 9-ல் அமைச்சர் சண்முகநாதன், அவரது உதவியாளர் பாலச்சந்தர் மற்றும் 5 பேர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர் பாக அமைச்சர் உள்ளிட்டோர் மீது நான் அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சாத்தான் குளம் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட் டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது, மனு தாரரின் புகாரில் உண்மையில்லை என்பதால், புகாரை முடித்து விட்டதாக போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் உரிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பரிகாரம் தேட அனுமதி வழங்கி, மனுவை முடித்து நீதிபதி நவ.7-ல் உத்தரவிட்டார்.
இந்நிலையில், விசாரணை நடத்தாமலேயே தனது புகாரை முடித்ததாக போலீஸார் பொய் யான தகவல் தெரிவித்ததால், புகாரை முடித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக் கோரி ஆசிரியர் இன்பராஜ் உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தி யநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் சண்முகநாதன் தரப்பில், இந்த வழக்கில் அமைச்சரையும் எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், வழக்கறிஞர் வைகுந்த் ஆகியோர் வாதிடும்போது, ‘அமைச்சரை காப்பாற்றும் நோக்கில் புகாரை முடித்ததாக போலீஸார் பொய் கூறியுள்ளனர். போலீஸார் நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளனர்’ என்றனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும் போது, ‘மனுவை முடித்து நீதி மன்றம் ஏற்கெனவே உத்தர விட்டது. அந்த உத்தரவில் நீதிபதி கையெழுத்திட்டுள்ளார். ஒரு நீதிபதி உத்தரவு பிறப்பித்து அதில் கையெழுத்திட்ட பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தர விட்டுள்ளது’ என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப் பித்த உத்தரவு: ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்றுவ தற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இந்த வழக்குக்குப் பொருந் தாது. ஏனெனில், இந்த வழக் கில் போலீஸார் மோசடி செய்துள் ளனர். தவறான தகவல்களை நீதி மன்றத்துக்குத் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவித்து பெறப்பட்ட உத்தரவை திரும்பப் பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரரின் புகார் மீதான விசாரணை முடிந்த தாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் கூறியுள் ளார். இந்த வழக்கில் முன்பு பிறப் பித்த உத்தரவு திரும்பப் பெறப் படுகிறது. மனுதாரரின் புகாரை முடிக்க போலீஸார் மேற்கொண்ட அணுகுமுறை, பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.
மனுதாரரின் புகாரை முடித்து விட்டதாக நீதிமன்றத்தில் ஏற்கெனவே போலீஸார் தாக்கல் செய்த அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் புகாரை சாத்தான்குளம் போலீஸார் மீண்டும் விசாரிக்க வேண்டும். அமைச்சர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT