Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM
கடலூர் மாவட்ட திமுக செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் இல்ல திருமண விழா காட்டு மன்னார்கோவிலில் புதன்கிழமை நடந்தது. இதற்கு தலைமை தாங்கி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக வாரிசு அரசியல் நடத்துகிறது என பலர் விமர்சனம் செய்கின்றனர். திமுகவில் பணியாற்றும் இளைஞர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் ஒருவரின் திறமை வெளிப்படுகிறது. அவர்கள் கட்சியின் மாவட்டச் செயலராகவோ அல்லது கட்சி நிர்வாகியாகவோ தெரியவரும் போது வாரிசு என அடையாளம் காணப்படுகிறார். வாரிசாக இருப்பதற்காக நாங்கள் வெட்கப்பட வில்லை. வாரிசுகள் இல்லாதவர்கள் பொறாமைப்படக் கூடாது என்றார்.
ஸ்டாலினின் இந்த பேச்சு திருமணத்துக்கு வந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்படியானால் உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு ஏதுமில்லை.
கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின், பன்னீர்செல்வத்துக்குப் பிறகு அவரது மகனா என கேட்டுக்கொண்டனர். கருணாநிதி ஒரு முறை, திமுக என்ற இயக்கம் சங்கர மடம் அல்ல என்றார் தற்போது அவரது மகன் வாரிசு ஏன் வரக்கூடாது என எதிர்கேள்வி எழுப்புகிறார்.
இனி திமுக என்றால் வாரிசுகளுக்கு மட்டுமே மகுடம் சூட்டப்படும் என்பதை வெளிப்படையாகவே ஸ்டாலின் பேசியிருப்பதாக தொண்டர்கள் கருத்துகளை வெளியிட்டனர்.
திருமண விழாவில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும் போது, “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கவில்லை. உறவு வைத்திருக்கிறோம். திமுகவின் கொள்கை, சமூக நீதி போன்ற பல்வேறு விஷயங்களில் உடன்பாடு உள்ளதால் உறவு வைத்திருக்கிறோம்” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT