Published : 09 Jul 2019 01:55 PM
Last Updated : 09 Jul 2019 01:55 PM

குன்னூர் அருகே யானை தாக்கி பழங்குடி உயிரிழப்பு

குன்னூர் அருகே யானை தாக்கி பழங்குடி ஒருவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஆனைப்பள்ளம் சின்னாளகம்பை பழங்குடியின வனப்பகுதி ஒட்டியுள்ளதால் இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ளது.

இந்நிலையில், மாரிசெல்வன்(65) நேற்று முன்தினம் இரவு ஆனைப்பள்ளத்தில் இருந்து அருகே உள்ள பில்லூர் மட்டம் கடைக்குச் சென்று திரும்பியுள்ளார்.

ஆனால், அவர் வீடு வந்து சேரவில்லை. வீட்டுக்குத் திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் நேற்று பல்வேறு இடங்களில் அவரைத் தேடினர். ஆனால், அவரைக் காணவில்லை. இதற்கிடையே யானைப்பள்ளம் அருகே யானை தாக்கி  ஒருவர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.

அங்கு சென்று பார்த்த போது மாரிசெல்வன் யானை தாக்கி இறந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட ஊர் மக்கள், பிரேதப் பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு  எடுத்து வந்தனர்.

குன்னூர் வனக்காப்பாளர் ராஜ்குமார் தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.50 ஆயிரத்தை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x