Last Updated : 05 Jul, 2019 12:00 AM

 

Published : 05 Jul 2019 12:00 AM
Last Updated : 05 Jul 2019 12:00 AM

மாவட்டச் செயலாளர் பதவி நிபந்தனையோடு அதிமுகவில் மீண்டும் விருத்தாசலம் எம்எல்ஏ

தினகரன் ஆதரவு நிலையிலிருந்து மீண்டும் முதல்வர் பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ளனர் அறந் தாங்கி ரத்தினசபாபதியும், விருத் தாசலம் கலைச்செல்வனும். அறந் தாங்கி ரத்தினசபாபதி கட்சிக்குத் திரும்பியதில், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும், சுகாதாரத் துறை அமைச்சருமான விஜயபாஸ் கரின் பங்கு குறிப்பிடத்தக்க வகை யில் இருந்தது. கட்சிக்குத் திரும்பி யதில் ரத்தினசபாபதிக்கு மாவட்டத் தில் போதிய எதிர்ப்பில்லை.

ஆனால் விருத்தாசலம் கலைச் செல்வனைப் பொறுத்தவரை, கடலூர் கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளர்கள் இருவரும் அவர் கட்சிக்கு திரும்பு வதை விரும்பவில்லை. இந்த நிலையில்தான் அமைச்சர் ஜெயக் குமாரின் ஆதரவோடு, மீண்டும் கட்சிக்குத் திரும்பியுள்ளார் கலைச் செல்வன். தனக்கு மாவட்டச் செயலாளர் அல்லது வாரியத் தலை வர் பதவி ஏதேனும் ஒன்றை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை யோடு கட்சியில் மீண்டும் இணைந் திருப்பதாக கலைச்செல்வனின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் கடலூர் மக்களவை முன்னாள் உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செய லாளருமான அருண்மொழித் தேவன் தனக்கு வாரியத் தலை வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத் துள்ளாராம். இவரது கோரிக் கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள கடலூர் கிழக்கு மாவட்டச் செய லாளரும், அமைச்சருமான சம்பத், தனக்கு நம்பிக்கைக்குரிய முன் னாள் நகர்மன்றத் தலைவருக்கு அப்பதவியை வழங்க வேண்டும் என பரிந்துரைத்திருக்கிறாராம்.

திரிசங்கு நிலையில் எம்எல்ஏ பிரபு

இந்த நிலையில், உளுந்தூர்ப் பேட்டை சட்டப்பேரவை உறுப்பி னர் குமரகுருவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தினகரனை ஆதரித்து வந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவும் பழனிசாமி அணிக்கு சென்று விடுவார் என்று கூறப்படுகிறது.

அவரை பழனிசாமி அணிக்கு மீண்டும் கொண்டு வர, பிரபுவின் தந்தையும், தியாகதுருகம் அதிமுக ஒன்றியச் செயலாளருமான ஐயப் பன் முயற்சித்து வருகிறார். தனக்கு மாவட்ட அளவில் பொறுப்பு வேண் டும் என்ற நிபந்தனையை பிரபு முன் வைத்துள்ளதாகவும், முதல்வர் அதற்கு இசைவு தெரிவித்திருப் பதாகவும் கூறப்படுகிறது இது தொடர்பாக எம்எல்ஏ பிரபுவிடம் கேட்டபோது, “நான் தற்போது தினகரன் அணியில் இல்லை. எப் போதும்போல் அதிமுக உறுப்பின ராகவே நீடிக்கிறேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x