Published : 04 Jul 2019 10:18 AM
Last Updated : 04 Jul 2019 10:18 AM

10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் கணக்கெடுப்பு: அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை முடிவு

தமிழகத்தில் 10-க்கும் குறைவாக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை அருகில் பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றிக்கையில், "10-க்கும் குறைவாக எண்ணிக்கையில் படிக்கும் மாணவர்கள் உள்ள பள்ளிகள் விவரம், அதன் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த அறிக்கையில் அருகாமையில் உள்ள பள்ளி விவரம், இரு பள்ளிகளுக்கும் இடையே தொலைதூர விவரம், இப்பள்ளியில் உள்ள மாணவர்களை அருகில் பள்ளிகளுக்கு மாற்ற உள்ள வசதி விவரம் மற்றும் ஏற்படும் சிரமங்கள் விவரம் (ஆறு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் தண்டவாளம் ஆகியவற்றை கடந்து செல்ல வேண்டிய இருப்பின்) தெரிவிக்க வேண்டும்.

2019-2020 கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் இந்த பள்ளிகளில் பணிபரியும் ஆசிரியர்களுக்கு மறு பணிக்கால நியமன ஆணைகள் வழங்கக்கூடாது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏவரேனும் மகப்பேறு விடுப்பில் சென்றால் அப்பணியிடத்திற்கு பதில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது.

மேற்படி பணியிடத்தில் பணிபுரிய நிர்வாகத்திற்கு உட்பட்ட/ஒன்றியத்தில் உள்ள பிற நிர்வாகத்தில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை கொண்டு மட்டுமே கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x