Published : 07 Jul 2019 08:37 AM
Last Updated : 07 Jul 2019 08:37 AM
சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீரை மிச்சப்படுத்தும் ‘ஏரேட்டர் பைப்’ மற்றும் வாக்வம் பிளஷ்அவுட் பயன்பாடு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு மட்டுமின்றி, பொதுமக்களும் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வருண பகவானை வேண்டி கோயில்களில் யாகம் வளர்க்கப்படுகிறது. இசைக் கலைஞர்கள் ஆங்காங்கே பாடல் கள் பாடி வருகின்றனர்.
வீடு கட்டும்போது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல நீர் சிக்கனத்துக்காக மக்கள் தாமாகவே சில முன் னேற்பாடுகளை செய்வதையும் காண முடிகிறது. இதுகுறித்து கேட்டபோது, இத்துறை சார்ந்தவர் கள் கூறியதாவது:
சென்னை கட்டுமானப் பொறி யாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம்:
வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒருமுறை பிளஷ் செய்தால் 20 லிட்டர் தண்ணீர் வெளியேறும். இப்போது தண்ணீரை குறைவாக வெளியேற்றும் ‘வேக்வம் சிஸ்டம்’ என்ற டாய்லெட் பிளஷ்அவுட் பிரபலமாகி வருகிறது.
விமானங்களில் பயன்படுத்தப் படும் இந்த வகை பிளஷ்அவுட்டில், காற்று அழுத்தத்தோடு தண்ணீர் கொட்டும். இதனால், 20 லிட்டருக்கு பதிலாக 5 லிட்டர் தண்ணீரிலேயே கழிவுகள் வெளியேற்றப்படும். வழக்கமான வெஸ்டர்ன் டாய்லெட் பிளஷ்அவுட் விலை ரூ.3,000. வேக்வம் பிளஷ்அவுட் விலை சுமார் ரூ.13,000.
பழைய வீடுகளில் சமையலறை உள்ளிட்ட இடங்களில் உள்ள குழாய்களில் ‘ஒயிட் புஷ்’ பொருத்தி தண்ணீரை சிக்கனமாக செலவழிக் கின்றனர். அல்லது புதிய ஏரேட்டர் பைப் பொருத்துகின்றனர். புதிதாக கட்டப்படும் குடியிருப்புகளில் ஏரேட்டர் பைப் பொருத்த அறிவுறுத் துகிறோம்.
விலை சற்று அதிகம் இருந் தாலும், தண்ணீரை சேமிக்கும் என்பதால் தற்போது பணக் காரர்கள் மட்டுமின்றி, நடுத்தர மக் களும் ஏரேட்டர் பைப்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இது தண்ணீருக்கான செலவு அல்ல. தண்ணீர் சேமிப்புக்கான முதலீடு.
புரசைவாக்கம் டிவிஎச் லும்பினி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சங்க முன்னாள் உறுப்பினர் அமித்ஷா:
சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தட்டுப்பாடு வந்த போது, சோதனை அடிப்படையில் தண்ணீர் குறைவாக செலவாகும் ஏரேட்டர் பைப்களை (Aerator Pipe) பொருத்தினோம். வீடுகளில் சமையலறை உள்ளிட்ட இடங்களில் ஏரேட்டர் பைப் பொருத்தியதால் 40 சதவீதம் தண்ணீர் சேமிக்க முடிந்தது. இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு அதிகமானதும், எங்கள் குடியிருப்பில் பலரும் ஏரேட்டர் பைப் பொருத்தியுள்ளனர்.
உதாரணத்துக்கு, சமையலறை யில் உள்ள வழக்கமான குழாயில் ஒரு நிமிடத்துக்கு 18 லிட்டர் கொட் டும். ஏரேட்டர் பைப் பொருத்திய பிறகு ஒரு நிமிடத்துக்கு 6 லிட்டர் தான் கொட்டுகிறது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை குழாயில் மட்டும் 12 லிட்டர் மிச்சமாகிறது.
எங்கள் குடியிருப்பில் மொத் தம் 450 வீடுகள் உள்ளன. இவற் றுக்கு தினமும் 3.50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஏரேட் டர் பைப் பொருத்திய பின்னர் 3.10 லட்சம் லிட்டர் செலவாகிறது. இதனால், 40 ஆயிரம் லிட்டர், அதாவது 12 சதவீதம் வரை தண் ணீர் மிச்சமாகிறது. ஒரு ஏரேட்டர் பைப் விலை தரத்துக்கேற்ப ரூ.100 முதல் ரூ.350 வரை விற்கப்படு கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT