Last Updated : 05 Jul, 2019 12:00 AM

 

Published : 05 Jul 2019 12:00 AM
Last Updated : 05 Jul 2019 12:00 AM

மணலை எடுத்துக்கொண்டு வைகையை தூர்வார அனுமதிக்கலாம்: அரசுக்கு பொதுப்பணித் துறை பரிந்துரை

வைகை அணையில் 20 அடிக் குப் படிந்துள்ள வண்டல் மண் ணை ரூ.200 கோடி வருவாய் ஒப்பந்தத்தில் அகற்ற பொதுப் பணித்துறை, அரசுக்குப் பரிந் துரை செய்துள்ளது.

ஆண்டிபட்டிக்கு வடக்கே 1958-ல் வைகை ஆற்றின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டது. அப்போது அணையின் முழுக் கொள்ளளவு 6879 மில்லியன் கனஅடியாக இருந்தது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட் டங்கள் குடிநீர் மற்றும் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தன.

அணையை கட்டி 61 ஆண்டுகள் ஆன நிலையில் நீருக்கு அடியில் 15 முதல் 20 அடி வரை வண்டல் மண் படிவுகள்தான் உள்ளன. இதனால் அணையில் நிர்ணயித்த அளவு தண்ணீரை தேக்க முடியாத நிலை உள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டி நீரியல் ஆராய்ச்சி நிலையம் வைகை அணையை ஆய்வு செய் தது. மண் படிவு தொடர்வதால் அணை கட்டியதில் இருந்து தற் போது வரை 14.16 சதவீதம் நீர் பரப்பளவு குறைந்துள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்தது.

அதன் பிறகு வண்டல், கிரா வலை அகற்ற வடிவமைப்பு மற்றும் கட்டுமான ஆதார மையக் குழு ஆய்வு செய்தது. இதன்படி இயந்திரங்கள் மூலம் மண் படிவங்களை உறிஞ்சி குழாய் மூலம் அணைக்கு வெகு தூரத்தில் குவிக்கலாம் என் றும், இரண்டாவதாக தண்ணீர் குறையும்போது மண் அள்ளும் இயந்திரம் மூலம் தூர்வாரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தூர் வாருவதற்காக ரூ.221 கோடி செலவாகும் என்று மதிப்பிடப் பட்டது. அணையின் கொள்ளளவை மீட்டெடுத்து பழைய நிலைக்குக் கொண்டு வர 28 மில்லியன் கன மீட்டர் அளவு மண் படிமங்களை அகற்ற வேண்டி உள்ளது. இழந்த நீர் கொள்ளளவான 905 மில்லியன் கன அடி நீரைத் தேக்குவதற்கு இனிமேல் புதிதாக ஒரு அணை கட்ட வேண்டும் என்றால் ரூ.1,500 கோடி செலவாகும். ஆனால் அணையை தூர் வாரினால் ரூ.221 கோடியோடு முடித்துக் கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்தனர்.

இருப்பினும் சுமார் 10 ஆண்டு களுக்கும் மேலாக இத்திட்டம் விவாத நிலையிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் தனியார் மூலம் தூர்வார அரசுக்குப் பொதுப்பணித் துறை பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறியதாவது: சுமார் ரூ.200 கோடி என்று நிர்ணயித்து வருவாய் ஒப்பந்தம் மூலம் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மதம் தெரிவிக்கும் நிறுவனம் அணையை தூர்வாரி மணலை விற்கவோ, பிற பயன்பாடுகளுக்கோ உபயோ கப்படுத்திக் கொள்ளவோ முடியும். இப்பணிக்காக பொதுப்பணித் துறை சார்பில் நீர் தேங்கும் பகுதிகளுக்கு சாலை அமைப்பது உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என்றனர்.

இருப்பினும் அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அணையின் பல ஆண்டு பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலம்? - பத்திரிகையாளர் எஸ்.பி.லக்‌ஷ்மணன் பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x