Published : 10 Jul 2019 09:29 AM
Last Updated : 10 Jul 2019 09:29 AM
ஹைதராபாத்தில் உள்ள இண்டிக் அகாடமியின் இன்டர்-குருகுலா பல்கலைக்கழக மையம்,நாக்பூரில் உள்ள பாரதிய சிக்ஷன் மண்டல் என்ற அமைப்புடன் இணைந்து வாராணசிசம்பூர்ணானந்த் சம்ஸ்கிருதபல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச வாக்யார்த்த சதஸை வரும் 12-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடத்துகிறது.
இதில் இந்தியா மட்டுமின்றி,பூடான், நேபாள நாடுகளைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் கலந்துகொண்டு சாஸ்திரங்களின் ஆழ்ந்த கருத்துகளை எடுத்துரைக்க உள்ளனர்.
வேத விற்பன்னர் ராஜமுந்திரி பிரும்மஸ்ரீ வி.கோபாலகிருஷ்ணசாஸ்திரி தலைமையில் இந்த சதஸ்நடைபெறுகிறது. வாராணசிசம்பூர்ணானந்த் பல்கலை. துணைவேந்தர் பண்டிட்ராஜாராம் சுக்லா ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, 14 பேர் கொண்ட சிறப்புக்குழுவின் வழிகாட்டுதலில் 11 சாஸ்திரங்களின் அடிப்படையில் 11 அமர்வுகளை நடத்த உள்ளார்.
இதில் 30 பேர் 30 தலைப்புகளில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை 150-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க உள்ளனர்.
வரும் 12-ம் தேதி வியாக்கரண சாஸ்திரம், நியாய சாஸ்திரம், வைஷிக சாஸ்திரம், மீமாம்ஸா சாஸ்திரம் ஆகிய சாஸ்திரத் தலைப்புகளில் 4 அமர்வுகள் நடைபெறும். 13-ம் தேதி பிராசீன நியாய சாஸ்திரம், ச்ரௌத ப்ரக்யா, ஜோதிஷம், கணித சாஸ்திரம் ஆகிய சாஸ்திர தலைப்புகளில் 3 அமர்வுகள் நடைபெறும். 14-ம்தேதி யோக சாஸ்திரம், ஆயுர்வேதம், த்வைத வேதாந்த சாஸ்திரம், அத்வைத வேத சாஸ்திரம், அத்வைத வேதாந்த சாஸ்திரம் ஆகிய சாஸ்திர தலைப்புகளில் 4 அமர்வுகள் நடைபெறும்.
14 பேர் கொண்ட சிறப்புக் குழுவில் சென்னை சம்ஸ்கிருத கல்லூரி பேராசிரியர் மணி டிராவிட் சாஸ்திரி, நேபாள நாட்டைச் சேர்ந்த குருபிரசாத் சுவேதி,பூடான் மன்னர் வம்சத்து ராஜகுரு சுவாமி விவேகானந்த சரஸ்வதி ஆகியோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT