Published : 20 Nov 2014 10:43 AM
Last Updated : 20 Nov 2014 10:43 AM

குடும்பநல நீதிமன்றத்தை செங்கல்பட்டில் அமைப்பதா?- காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் 3 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

தமிழக அரசு அறிவித்த மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் செங்கல் பட்டில் அமைக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதைக் கண்டித் தும் மாவட்ட தலைநகரான காஞ்சி புரத்தில் நீதிமன்றத்தை அமைக்கக் கோரியும் வழக்கறிஞர்கள் 3 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் பார் அசோசியேசன்ஸ் தலைவர் கார்த்தி கேயேன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் செங்கல்பட்டில் செயல்படுவதால், தலைநகரான காஞ்சிபுரத்தில் மாவட்ட நீதிமன்றம்- 2 செயல்பட்டு வரு கிறது. இதனால், காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த விரைவு நீதிமன்றம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மாற் றப்பட்டது. அதனால், இனி வரும் காலங்களில் புதிதாக தொடங்கப்படும் அனைத்து நீதிமன்றங்களும், மாவட் டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தி லேயே தொடங்கப்படும் என அப்போதைய நீதியரசர்கள் உறுதியளித்தனர்.

ஆனால், புதிய நீதிமன்றங்களான மகிளா கோர்ட் மற்றும் சமரசதீர்வு மையம் காஞ்சிபுரம் வழக்கறிஞர்களின் எதிர்ப்பையும் மீறி செங்கல்பட்டில் தொடங்கப்பட்டது. இதை கண் டித்து காஞ்சிபுரத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழக அரசு மாவட்ட தலைநகரங்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகளை சட்டசபை கூட்டத் தொடரில் அறிவித்தது. ஆனால் விதிகளை மீறி குடும்ப நல நீதி மன்றத்தை மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில் அமைக்காமல் செங்கல்பட்டில் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் நீதிமன்றத்தை காஞ்சிபுரத்தில் அமைப்பது தொடர் பாக நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள போது, நீதிமன்றத்தை செங்கல்பட்டில் அமைக்கும் பணிகள் நடைபெறுவது ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே கடந்த 2008-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தொழிலாளர் நீதிமன்றம், நில அபகரிப்பு தடுப்பு நீதிமன்றம் ஆகியவை இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. மேலும், வருவாய் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் என அறிவிப்புடன் விளங்கும் போது, அரசு தொடர்பான நீதிமன்றம் உள்பட பல்வேறு ஆவணங்களில் செங்கல்பட்டு மாவட்டம் என குறிப்பிடப்படுகிறது.

நீதிமன்றங்கள் தொடர்பாக அரசி னால் வெளியிடப்படும் அறிவிப்பு கள் மற்றும் பணிகளை, செங்கல் பட்டு நீதிமன்ற நிர்வாகம் காஞ்சி புரம் பார் அசோசியேசன்ஸ் வழக்கறி ஞர்களுக்கு தெரிவிக்காமல் மறைக் கும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது.

காஞ்சிபுரத்தில் 2500 குடும்ப நல வழக்குகள் உள்ளன. ஆனால், செங்கல்பட்டில் 110 வழக்கு கள் மட்டுமே உள்ள நிலையில், குடும்ப நல நீதிமன்றத்தை செங்கல் பட்டில் அமைப்பதற்கு காஞ்சிபுரம் பார் அசோசிசியேசன் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

எனவே குடும்ப நல நீதிமன்றங்களை காஞ்சிபுரத்திலேயே தொடங்க வலியுறுத்தி புதன்கிழமை முதல் 3 நாட்கள் காஞ்சிபுரத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கை ஏற்கப் படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, செங்கல்பட்டு நீதி மன்ற வட்டாரங்கள் கூறியதாவது:

நீதிமன்ற நிர்வாகத்துக்கு அரசின் மூலம் வரும் அனைத்து வித மான புதிய திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பான விவரங்கள் காஞ்சி புரம் நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப் படுகிறது. எனவே, நீதிமன்ற நிர்வாக தகவல்களை மறைப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x