Published : 10 Nov 2014 09:11 PM
Last Updated : 10 Nov 2014 09:11 PM

மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அறிவிக்கப்படாததால் ஏமாற்றம்

மீனவப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அறிவிக்கப்படும் என காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக மீனவப் பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திரமோடியிடம் மீனவர் நலனுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்குவது போல மீனவர்களுக்கும் கடன் தர வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

இருநாட்டு மீனவர்களும், பாரம்பரிய முறைப்படி மீன்பிடிக்கும் உரிமை பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

கடந்த ஜனவரி 31 அன்று பாம்பனில் பாஜகவினர் நடத்திய கடல் தாமரைப் போராட்டத்தில் அப்போதைய மக்களவை எதிர்கட்சித் தலைவரும் தற்போதையவெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் பாஜக ஆட்சிக்கு வந்தால்உடனடியாக மீனவர்களுக்கென தனி அமைச்சரகம் உருவாக்கப்படும். மீனவப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

மேலும் ராமநாதபுரத்தில் கடந்த ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, விஞ்ஞானவளர்ச்சியின் மூலமும் மீனவர்களை பாதுகாக்கவும் குஜராத்தில் சேட்டிலைட்மூலம் மீன்கள் அதிகம் இருக்கும் இடத்தை கண்டறிந்து அந்த விபரங்களைமீனவர்களின் செல்போன்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இதனையறிந்து கொண்டு அவர்கள் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று மீன்களை அதிக அளவில் பிடித்துக் கொண்டு 2 மணி நேரத்தில் திரும்பி விடுகின்றனர். பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் இந்தியா முழுவதும்விரிவுபடுத்தப்பட்டு மீனவர்களையும் பாதுகாப்போம். வண்ணமீன்கள் வளர்ப்புதொழில் நுட்பத்தையும் மீனவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவற்றை ஏற்றுமதிசெய்ய வழிவகை ஏற்படுத்தி மீனவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடையவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அறிவிக்கப்படும் என காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x