Published : 21 Nov 2014 11:27 AM
Last Updated : 21 Nov 2014 11:27 AM

எண்ணூர் தாமரைக் குளம் ரூ.4 கோடி செலவில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்படும்: மேயர் சைதை துரைசாமி தகவல்

எண்ணூரில் உள்ள தாமரைக் குளம், ரூ.4 கோடி செலவில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்படும் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட் டத்தில் 1-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எ.எழிலரசி பேசும் போது, “எங்கள் பகுதியில் உள்ள தாமரைக் குளம் பல ஊர்க ளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங் கியது. தற்போது இக்குளம் மாச டைந்து, கழிவுநீர் குட்டையாக மாறி யுள்ளது. இக்குளம் சுத்தப்படுத்தப் படுமா” என்று கேள்வி எழுப்பி னார்.

இதற்கு மேயர் பதிலளித்து பேசும்போது, “தாமரைக் குளம், சுமார் 2 ஹெக்டேர் பரப்பள வில் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கிய பகுதியாகவும், மீன்பிடி குளமாகவும் இருந்தது. பின்னர் இக்குளத்தைச் சுற்றி குடியிருப்பு கள் உருவாகி ஆக்கிரமிப்புக் குள்ளாகி, அதில் கழிவுநீர் கலக்க விடப்பட்டது. இதனால் இக்குளம் மாசடைந்தது. இதை சீரமைக்க முதல்கட்டமாக அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக இக்குளத்தில் உபரி நீர் செல்லவும், புனரமைப்புக் காகவும் வடிகால்வாய் கட்டப் பட உள்ளது. இதற்கு ரூ.4 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டுள்ளது. பின்னர் இக்குளம் அப்பகுதி மக்களுக்கான மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப் படும்” என்றார்.

மாதவரத்தில் வீடற்றவர்களுக்கான காப்பகம்

மாதவரம் மண்டலத்தில் 26-வது வார்டில் சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் 2 அலுவலகக் கட்டிடங்கள் பயன் பாடற்று உள்ளதால், அதை மாநக ராட்சி குத்தகைக்கு எடுத்து, ரூ.47 லட்சம் செலவில் வீடற்றவர் களுக்கான காப்பகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு மாத வாட கையாக ஒவ்வொரு கட்டிடத் துக்கும் தலா ரூ.1000 மற்றும் சேவை வரி உட்பட ரூ.24,719ஐ மாநகராட்சி வழங்கும். மேலும் ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம் பேட்டை, அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் பயனற்று கிடக்கும் 12 மாநகராட்சிப் பள்ளி கட்டிடங்களில் இரவு நேர காப்பகங்கள் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழவந்தாங்கலில் 2 சாலைகள் விரிவாக்கம்

ஆலந்தூர் மண்டலத்தில் பழவந் தாங்கல் பகுதியில் கிருஷ்ணசாமி சாலை மற்றும் நங்கநல்லூர் 5-வது முதன்மை சாலைகளை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பழவந்தாங்கல் சுரங்கப்பாதை தொடர்ச்சியாக உள்ள சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் எனவும் மாநகராட்சி தெரி வித்துள்ளது.

மேலும், சாலைகளில் பாதாள சாக்கடை மூடிகளை பரா மரிக்கும் பணியை சென்னை மாநக ராட்சியே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தப் பணியை குடிநீர் வாரியம் செய்துவந்தது.

ஆனால், சாலை களை மாநகராட்சி போடும்போது, பாதாள சாக்கடை மூடிகளின் உயரத்தை மாற்றாமல் இருப்பது சாலைகளை பயன்படுத்து வோருக்கு சிரமமாக உள்ளது. எனவே, சாலைகளை போடும் போது அவற்றின் உயரத்தையும் உடனே மாற்றியமைக்க வசதியாக மாநகராட்சியே இந்தப் பணியை மேற்கொள்ளும் என்று மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x