Published : 29 Jun 2019 09:35 AM
Last Updated : 29 Jun 2019 09:35 AM

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல் - 1979-ம் ஆண்டு நடந்த விழா அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பக்தர்

கடந்த 1979-ம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் வைபவம் 42 ஆண்டு களுக்கு பிறகே நடத்தப்பட்டுள்ளது. அப்போது மக்கள் வருகை முதலில் குறைவாக இருந்தாலும் கடைசி நேரத்தில் கூட்டம் அதிகரித்தது. எனவே முன்னெச்சரிக்கையாக தற்போது நடைபெறும் விழாவில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த 1937-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி அத்திவரதர் வைப வம் நடைபெற்றுள்ளது. அதற்கு பிறகு 40 ஆண்டுகள் கழித்து 1977-ம் ஆண்டில் விழா நடந் திருக்க வேண்டும். ஆனால், மேலும் 2 ஆண்டுகள் கழித்து 1979-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதிதான் விழா நடைபெற்றது. அதற்கு முன் 13-6-1892 மற்றும் 18-8-1854 ஆகிய தேதிகளில் அத்திவரதர் விழாவை நடத்தியுள்ளனர். அத்தி வரதர் வைபவம் பலமுறை நடந் திருந்தாலும், இந்த முறைதான் சரியாக 40 ஆண்டுகள் கழித்து விழா நடத்தப்படுகிறது என்பது சிறப்பு.

கடந்த முறை நடைபெற்ற இந்த விழாவை காஞ்சிபுரம் வரத ராஜ பெருமாள் கோயில் சந்நிதி தெருவைச் சேர்ந்த கோ.நாராய ணன்(65) என்பவர் நேரில் பார்த் துள்ளார். அப்போது உணவகம் நடத்தி வந்த இவர், அந்த விழா தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட அழைப்பிதழ், வெளி வந்த செய்திகள் ஆகியவற்றை பத்திரமாக சேகரித்து வைத்துள் ளார். கடந்த முறை நடைபெற்ற விழா குறித்து தனது அனுபவங் களை நம்மிடம் பகிர்ந்து கொண் டார்.

கடந்த முறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதரை வெளியே எடுக்கும்போது பெரிய கெடுபிடி ஏதும் இல்லை. விரும்புபவர்கள் சுவாமியைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது ரேடியோ தவிர பிற தகவல் ஒலிபரப்பு சாதனங்கள் இல்லாததால், பலருக்கு இந்த விழா குறித்து தெரிந்திருக்கவில்லை. எனவே, முதலில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அப் போது நாங்கள் தினமும் சென்று அத்திவரதரை தரிசித்தோம்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. முத லில் கூட்டம் குறைவாக இருந்ததால் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பிரதான கோபுரம் வழியாகச் சென்று அத்திவரதரை பார்த்துவிட்டு, அதே வழியில்தான் பக்தர்கள் திரும்ப வர வேண்டும். செல்வதற்கும், வரு வதற்கும் ஒரே வழி இருந்ததால் கடைசி 3 தினங்களில் கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் அப்போது 13 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 பேர் மட்டுமே இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இப்போது சமூக வலைதளங் கள், செய்தித்தாள்கள், தொலைக் காட்சி ஆகியவை மூலம் இந்த விழாவை குறித்த விவரங்கள் அனைவரையும் சென்றடைந்துள் ளன. கடந்த முறையைவிட இப்போது அதிக அளவு மக்கள் வர வாய்ப்பு உள்ளது. அப்போது வந்த மக்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை. பலர் 10 பைசாவுக்கு தண்ணீரை விற்பனை செய்தனர்.

இப்போது அத்திவரதர் விழா வின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடாமல் போதிய பாது காப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவர்களுக்கு போதிய குடிநீர், கழிப்பறை வசதிகளை உருவாக்கித் தர வேண்டும். 1979-ம் ஆண்டு அத்திவரதர் விழாவின்போது தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த ஆண் டும் அதுபோல் தபால் தலை வெளியிட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x