Last Updated : 19 Aug, 2017 12:06 PM

 

Published : 19 Aug 2017 12:06 PM
Last Updated : 19 Aug 2017 12:06 PM

வடமாநில ஆர்டர்கள் இல்லாததால் சிவகாசியில் ரூ.1,500 கோடி பட்டாசு தேக்கம்

மழை, வெள்ளம், வறட்சி மற்றும் உச்ச நீதிமன்றத் தடை உத்தரவு உள்ளிட்ட காரணங்களால் வட மாநில ஆர்டர்கள் இல்லாததால் சிவகாசியில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அவ்வூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 850-க்கும் மேற்பட் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சிவகாசி பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரமாக திகழ்வது பட்டாசு தொழில். இத்தொழிலில் நேரடியாக சுமார் 2 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் பணியாற்றி வருகின்றனர்.

தசரா மற்றும் தீபாவளி பண்டி கைகளின்போது தமிழ்நாட்டில் மட்டுமின்றி குறிப்பாக வட மாநிலங்களில் அதிகமாக பட்டாசு வெடிக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங் குவதையொட்டி, சிவகாசியில் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இருப்பினும், வட மாநிலங்களி லிருந்து பட்டாசுக்கான ஆர்டர்கள் இதுவரை கிடைக்காததால், பெரும் பாலான பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் தேக்கமடைந் துள்ளன.

இதுகுறித்து பட்டாசு உற் பத்தியாளர் ஜி.விநாயகமூர்த்தி கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரியில் பட்டாசுக்கான வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு விற்பனை யாளர்கள் கொள்முதல் செய்ய தயங்குகின்றனர். குறிப்பாக, வட மாநில பட்டாசு விற்பனையாளர் களிடம் இருந்து இதுவரை எதிர்பார்த்த அளவு ஆர்டர்கள் கிடைக்கவில்லை.

மூலப்பொருள் விலை உயர்வு

ஜிஎஸ்டியில் பட்டாசுக்கான வரியை 18 சதவீதமாக குறைக்க தொடர்ந்து வலியு றுத்தப்பட்டு வருகிறது. பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனை யாளர்களும் வரி குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

vinayagajpgஜி.விநாயகமூர்த்தி

இந்த ஆண்டு பட்டாசுக்கான மூலப்பொருள்கள் சுமார் 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. மேலும் டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதனால் இந்த 5 மாநிலங்களிலும் இதுவரை பட்டாசு விற்பனைக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால், சிவகாசியில் பட்டாசு கொள்முதல் ஆர்டர்கள் கொடுக்க இந்த 5 மாநில வியாபாரிகளும் தயக்கத்தில் உள்ளனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. அப்போது, பட்டாசு விற்பனையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியானால் பட்டாசுக்கு ஆர்டர்கள் கிடைக்கும்.

அதோடு, மற்ற மாநிலங்களில் மழை, வெள்ளம், வறட்சி போன்ற காரணங்களாலும், பட்டாசு வெடித்தால் சுற்றுப்புற மாசு ஏற்படுவதாக பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாலும் பட்டாசுக் கான தேவையும், பட்டாசு நுகர்வோர் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சிவகாசியில் உள்ள சுமார் 600-க்கும் மேற் பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்தி முடிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படாமல் சுமார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேங்கி உள்ளன.

உற்பத்தி செய்யப்பட்ட பட் டாசுகள் விற்பனைக்கு அனுப்பப் படாததாலும், போதிய ஆர்டர்கள் இல்லாததாலும் சிறு பட்டாசு ஆலைகள் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமலும், தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமலும் தவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x