Published : 04 Aug 2017 09:43 AM
Last Updated : 04 Aug 2017 09:43 AM

தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் கட்டிட வரைபடத்துக்கு அனுமதி

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரத்துக்கு அடுத்தபடியாக, ஆன்லைன் முறையில் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் நடைமுறை மதுரை மாநகராட்சியில் நேற்று தொடங்கியது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சில மாநகராட்சிகளில் வரைபட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் முறை அமலுக்கு வந்தது. ஆனால், வரைபடம் மற்றும் ஆவணங்களை கம்யூட்டரில் பதிவு செய்வது வரையிலான பணிகள் மட்டுமே ஆன்லைன் நடைமுறை இருந்தது. அதற்கு அடுத்த நிலை பணிகள், ஒப்புதல் வழங்குதல், வரைபட அனுமதி கடிதம் உள்ளிட்ட பணிகள் வழக்கமான பழைய நடைமுறையிலேயே இருந்தன.

கட்டிட அனுமதி கிடைப்பதில் அலைக்கழிப்பு, தாமதம், வெளிப்படை தன்மை இல்லாததால் முறைகேடு ஆகியவை குறித்து புகார்கள் எழுந்தன. அதனால், மாநகராட்சிகளில் கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் முறையில் மேற்கொள்ள தமிழ்நாடு நகராட்சிகள் நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்தது.

முதற்கட்டமாக, மதுரை மாநகராட்சியில் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் அனைத்து நடைமுறைகளும் ஆன்லைன் முறையில் நேற்று தொடங்கப்பட்டன. இந்த வகையில் மதுரை நாட்டில் இரண்டாவது நகராகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x