Published : 24 Apr 2014 08:20 AM
Last Updated : 24 Apr 2014 08:20 AM
தேர்தலில் பண நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் எடுத்த கடுமையான நடவடிக்கைகளையும் மீறி ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் பரவலாக அரங்கேறி இருக்கிறது.
தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமலுக்கு வந்த நாளி லிருந்து தேர்தல் ஆணையம் காட்டிய கெடுபிடி களுக்கு அளவேயில்லை. வாக்காளர்க ளுக்கு பணமோ பரிசுப் பொருட் களோ கொடுப்பது குற்றம் என்று கூறி அப்படி கொடுப்பதை முற்றிலும் தவிர்க்கும் வண்ணம் அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்தது.
சட்டமன்ற தொகுதிகள் வாரி யாக பறக்கும் படைகள், சோத னைச்சாவடிகளில் நிலையான கண்காணிப்பு அலுவலர்களின் தொடர் கண்காணிப்பு, தனித்தனி உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்று ஆணையம் கெடுபிடிகளை இறுக்கியது. இந்த நடவடிக்கைகளின் மூலம் சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். வங்கிகளில் ஐம்ப தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவே பலரும் தயங்கினர்.
இதுகுறித்து பேசிய கும்ப கோணம் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சத்தியநாராயணன், ‘‘அரசியல்வாதிகள் பணம் கொண்டு போவதை தடுப்பதற் காக தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டது வியாபாரி கள் மற்றும் அப்பாவி பொது மக்கள்தான். சிறு குறு வியாபாரி களின் வணிகம்தான் முடக்கப் பட்டது. பல கெடுபிடிகள் இருந்தும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை அதிகாரி களால் தடுக்க முடியவில்லை. திங்கள்கிழமை காலை முதல் வாகனச் சோதனை செய் யும் அதிகாரிகள் ஏனோ பாரா முகமாகவே இருந்தார்கள். பல இடங்களில் பறக்கும் படை அதிகாரிகளை காணவில்லை. அந்த குறிப்பிட்ட அவகாசத்தில் பெருமளவு பணம் பல பகுதிக ளுக்கு நகர்ந்திருக்கிறது’’ என்றார். திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய் மாலைக்குள் பல இடங்களில் ஆளும்கட்சியினர் பணப் பட்டுவாடாக்களை முடித்தி ருக்கிறார்கள்.
சில இடங்களில் மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் செல்வந்தர் வேட்பாளர்கள் தரப்பிலும் பணப் பட்டுவாடாக்கள் நடந்துள்ளன. எனினும் ஆளும் கட்சியினர் அள வுக்கு அவர்களால் பணத்தைக் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை. ஆளும்கட்சி தரப்பில் 50 வாக்காளர்களுக்கு ஒருவர் என முன்பே பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கைகளில் பட்டியல் தயாராக இருந்ததால், பணப் பட்டு வாடாக்கள் ஒரு மணி நேரத்துக் குள் திட்டமிட்டு முடிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT