Published : 15 Nov 2014 10:42 AM
Last Updated : 15 Nov 2014 10:42 AM

பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

மேல்மருவத்தூர் இருமுடி திரு விழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தைப்பூசம், பொங்கல் பண்டிகை களை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையிலிருந்து இரவு 10.50 மணிக்கு டிசம்பர் 11, 14, 16, 18, 21, 23, 25, 28, 30, ஜனவரி 01, 04, 06, 08, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29, பிப்ரவரி 01, 03 ஆகிய தேதிகளில் புறப்படும்சிறப்பு ரயில் (எண்.06626) மறு நாள் காலை 8 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

மறு மார்க்கத்தில் செங்கல் பட்டில் இருந்து மாலை 5 மணிக்கு டிசம்பர் 12, 15, 17, 19, 22, 24, 26, 29, 31, ஜனவரி 02, 05, 07, 09, 12, 14, 16, 19, 21, 23, 26, 28, 30, பிப்ரவரி 02, 04 ஆகிய தேதிகளில் புறப்படும் சிறப்பு ரயில் (எண். 06625) மறு நாள் அதிகாலை 2.30 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த ரயில்கள் சோமனூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வாரம் இரு முறை செல்லும் ரயில்கள்

ராமேஸ்வரத்திலிருந்து மதியம் 2.30 மணிக்கு டிசம்பர் 15, 17, 22, 24, 29, 31, ஜனவரி 05, 07, 12, 14 ஆகிய தேதிகளில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்.06752) மறு நாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

மறுமார்க்கத்தில் செங்கல்பட் டிலிருந்து மதியம் 2 மணிக்கு டிசம் பர் 16, 18, 23, 25, 30, ஜனவரி 01, 06, 08, 13, 15 ஆகிய தேதிகளில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்.06751) மறு நாள் அதிகாலை 2 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவ கங்கை, தேவக்கோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப் புரம், மேல்மருவத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வாரம் ஒரு முறை செல்லும் ரயில்

ராமேஸ்வரத்திலிருந்து டிசம்பர் 19, 26, ஜனவரி 02, 09, 16 ஆகிய தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்.06754) மறு நாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

செங்கல்பட்டிலிருந்து டிசம்பர் 20, 27, ஜனவரி 03, 10, 17 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்.06753) மறு நாள் அதிகாலை 2 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x