Published : 21 Aug 2017 12:07 PM
Last Updated : 21 Aug 2017 12:07 PM
போதிய கண்காணிப்பு இல்லாத தால் கன்னியாகுமரியில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. உணவகங்கள், தங்கும் விடுதி களில் பிளாஸ்டிக் பைகள் தாராள மாக புழக்கத்தில் உள்ளன. பயன் படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரை ஓரங்களில் தேங்கி கிடப் பதால் கடல்வாழ் உரியினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உதகை, கொடைக்கானல் போல் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தடை அமலில் இருந்தாலும், இதை மீறி உணவகங்கள், தங்கும் விடுதிகளில் பிளாஸ்டிக் பைகள் தாராளமாக புழக்கத்தில் உள்ளன.
வர்த்தக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கன்னியாகுமரி பேரூராட்சியில் ஆண்டு தோறும் சிறப்பு தீர்மானம் போடப்படும். இதை தொடர்ந்து சில நாட்கள் மட்டும் ஆய்வு செய்யும் பேரூராட்சி அதிகாரிகள், இதன் பின்னர் கண் காணிக்கத் தவறுவதால் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர் கதையாகி வருகிறது.
குறிப்பாக உணவகங்களில் இருந்து தங்கும் விடுதிகளுக்கு உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் சென்று சாப்பிட்ட பிறகு அவற்றை அங்குள்ள குப்பை தொட்டிகளில் வீசுகின்றனர். அங்கிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரை பகுதிகளில் கொட்டப்படுகின்றன.
கண்காணிப்பு இல்லை
இதுகுறித்து சுற்றுலா ஆர்வலர் கள் கூறும்போது, ‘‘கன்னியா குமரியை பொறுத்தவரை பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் அவற்றின் புழக்கம் ஓரளவுக்கு குறைந்தது. ஆனால், கடந்த 6 மாதத்துக்கும் மேலாக இதுகுறித்து அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் தங் களுக்கு தேவையான உணவுகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் செல்கின்றனர். விடுதிகளில் மது அருந்துவோரும் தங்களுக்கு தேவைவயான பொருட்களை கொண்டு செல்ல பிளாஸ்டிக் பைகளையே பயன்படுத்துகின்ற னர். இதனால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அழியும் கடல் உயிரினங்கள்
கடற்கரை ஓரங்களில் பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன. காற்றின் வேகத்தால் இவை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு தண்ணீரை மாசடையச் செய்கின்றன. இதனால் ஆமை போன்ற கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. எனவே பிளாஸ்டிக் மீதான தடையை கண்டிப்புடன் அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து கன்னியாகுமரியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறும் போது, ‘‘மக்கும் தன்மை உள்ள பிளாஸ்டிக் பைகளை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான வியாபாரிகள் காகிதங்களில் தான் பொருட்களை மடக்கி கொடுக்கிறோம். ஆனால், பெரும்பாலானோர் வெளி இடங்களில் இருந்து உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை தேவை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT