Published : 03 Aug 2017 11:41 AM
Last Updated : 03 Aug 2017 11:41 AM
திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தபால் நிலையங்களில் ஸ்வைப் மிஷின் நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. மணியார்டர், பதிவுத் தபால் அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளுக்கு, டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.
மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், பல்வேறு அரசுத்துறை நிறுவனங் களில் ஸ்வைப் மெஷின் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங் களில் உள்ள தபால் நிலையங்களில் இந்த மிஷின் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், பாளையங் கோட்டை மற்றும் திருநெல்வேலி தலைமை அஞ்சலகங்களில் ஸ்வைப் மிஷின் நேற்றுமுதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மணியார்டர், பதிவுத்தபால், விரைவுத்தபால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்சல் பதிவு சேவைகளைப் பெறலாம்.
இது குறித்து திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வி.பி. சந்திரசேகர் கூறியதாவது: தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள முக்கிய தபால் நிலையங்களில் இந்த இயந்தி ரம் அறிமுகம் செய்யப்பட்டிருக் கிறது. பாளையங்கோட்டையிலுள்ள தலைமை தபால் நிலையத்திலும் திருநெல்வேலி ஸ்ரீபுரத்திலுள்ள தபால் நிலையத்திலும் இதை அறிமுகம் செய்திருக்கிறோம். அடுத்த கட்டமாக, அம்பாசமுத்திரத் திலுள்ள தபால் நிலையத்திலும் அறிமுகம் செய்யப்படும். இவற்றின் வரவேற்பை பொருத்து முக்கிய தபால் நிலையங்களிலும் இவற்றை அறிமுகம் செய்ய திட்டமுள்ளது என்றார் அவர்.
கலாம் தபால் உறை
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் கடந்த 27-ம் தேதி அவரது மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார். மணிமண்டப திறப்பு விழா நினைவாக தபால்துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அஞ்சல் உறை தபால் நிலையங்களில் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டி ருக்கின்றன. ரூ.20-க்கு இந்த தபால் உறையை பெற்றுக்கொள்ளலாம். பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் 700 சிறப்பு தபால் உறைகள் வரப்பெற்றுள்ளன.
ஏற்கெனவே தலைமை தபால் நிலைய நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டபோது இந்த சிறப்பு தபால் உறையை வாங்குவதற்கு 400 பேர் வரையில் முன்பதிவு செய்திருந்தனர். அவர் களுக்கு இந்த தபால் உறைகள் நேற்று வழங்கப்பட்டன. தபால் தலைகள், சிறப்பு தபால் உறைகள், நாணயங்கள் சேகரிப்போர் இந்த சிறப்பு தபால் உறையை தலைமை தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT