Published : 01 Aug 2017 05:38 PM
Last Updated : 01 Aug 2017 05:38 PM
முதல்வரின் தொகுதிக்கு உட் பட்ட கச்சராயன்பாளையம் ஏரியைப் பார்க்கச் சென்ற ஸ்டாலினை தடுத்து நிறுத்தி கைது செய்த தற்கு காரணம் சட்டம் ஒழுங்கு பிரச் சினையா, கவுரவப் பிரச்சினையா? என்பது குறித்து தமிழக அரசு வரும் 4-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் வழக்கறிஞர் கிரிராஜன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் போதிய மழை இல்லாததால் பொதுமக்கள், விவ சாயிகள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளனர். மழைக்காலத்துக்கு முன்பாக ஏரி, குளம், குட்டை, கண்மாய் போன்ற நீர்நிலைகளை தமிழக அரசு முறையாக தூர் வாரிப் பராமரிக்கவில்லை. இதன் காரணமாக திமுகவினர் நீர்நிலை களைத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை திமுகவினர் சுத்தம் செய்து தூர்வாரி சீரமைத்து வரு கின்றனர். மாநிலம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து, இப்பணி களைப் பார்வையிட்டு, திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்தப் பணிகளால் மக்கள் மத்தியில் திமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்துவருகிறது. ஆளுங்கட்சியினர் இதைப் பொறுத் துக்கொள்ள முடியாமல், போலீ ஸார், அதிகாரிகளுடன் கைகோர்த்து பல்வேறு இடையூறு களை ஏற்படுத்துகின்றனர். தமிழக முதல்வர் கே.பழனிசாமி யின் தொகுதியான எடப்பாடியில் கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சராயன்பாளையம் ஏரியை திமுகவினர் தூர்வாரி சீரமைத் துள்ளனர். அந்த ஏரியில் அதிமுக வினர் முறைகேடாக மணல் அள்ளி வந்தனர். இதனால் அந்த ஏரியைப் பார்வையிடுவதற்காக, ஸ்டாலின் கடந்த ஜூலை 27-ம் தேதி கோவை வழியாக சேலம் செல்ல முற்பட்டார். வழியிலேயே அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திமுக அறிவித்த மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி மறுக் கப்பட்டதாகவும், அதனால் ஸ்டா லின் சேலத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. உண்மையில், மனிதச் சங்கிலி நடக்க இருந்த இடத் துக்கும், ஸ்டாலின் செல்ல இருந்த கச்சராயன்பாளையம் ஏரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதல்வரின் தொகுதிக்கு ஸ்டாலின் செல்லக்கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்துடன் அவரைத் தடுத்து கைது செய்துள்ளனர். வரும்காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளை திமுக தூர்வார தமிழக அரசு தடை விதிக்கக் கூடாது, இடையூறு செய்யக்கூடாது. ஸ்டாலின் ஏற் கெனவே மத்திய அரசின் உயர் பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார். தூர்வாரும் பணிகளைப் பார்வை யிடச் செல்லும் அவருக்கு தமிழக அரசு அதிகாரிகள், போலீஸார் எவ்வித இடையூறும் செய்யக் கூடாது, தடுக்கக்கூடாது. பேச் சுரிமை, சுதந்திரமாகச் செல்லுதல் போன்றவை அடிப்படை உரிமை கள். அதை தமிழக அரசு தடுக்க முடியாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. நீதிபதி எம்.துரைசாமி முன்பு இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்டிஎஸ் மூர்த்தி ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது காவல் துறையின் கடமை. ஆனால், மு.க.ஸ்டாலின் எந்த வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமாக இருந்தார் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். ஸ்டாலினை சேலத்துக்குள் வர விடாமல் கைது செய்ததற்கு காரணம் சட்டம் ஒழுங்கு பிரச் சினையா, கவுரவப் பிரச்சினையா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வரும் 4-ம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தர விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT