Published : 04 Aug 2017 04:18 PM
Last Updated : 04 Aug 2017 04:18 PM
தமிழக சிறைகளில், கைதிகளிடம் உள்ள செல்போன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஜெர்மானிய ஜாமர் கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக, தமிழ்நாடு சிறைத்துறை, 12 மத்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மொபைலில் தொடர்புகொள்வதை தடுத்து நிறுத்துவதற்கு.. ஜெர்மன் தயாரிப்பு ஜாமர் கருவிகளைத் தருவித்துள்ளது.
இதில் உள்ள முக்கிய அம்சம், தொலைபேசி அழைப்பின் இடத்தைக் காட்டுவது அதேநேரத்தில் சிறை வளாகத்திற்கு வெளியே உள்ள மொபைல் ஃபோன் இணைப்புடன் குறுக்கிடாது. முதல் ஜாமர் கருவி புழல் மத்திய சிறைச்சாலை II-ல் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியின் முழுமையான செயல்முறை நவம்பர் இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள தண்டனைக் கைதிகள், தீவிரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகள் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகங்களில் இது முதற்கட்டமாக நிறுவப்பட உள்ளதாக சிறைத்துறை கூடுதல் தலைவர் சி.சைலேந்திர பாபு தெரிவித்தார்.
இடம் காட்டும் ஜாமர் கருவிகள் தமிழக சிறைகளில் நிறுவப்படுவது இதுவே முதல்முறை. இதற்கான கேட்ஜெட்களை எலக்ட்ரானிக் கார்ப்போரேஷன் ஆப் இன்டியா லிட்.(இசிஐஎல்)லிடமிருந்து தருவிக்கப்பட்டுள்ளது. பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஜாமர்கள் சிறைச்சாலைக்கு வெளியே உள்ள மொபைல் போன் அல்லது பிற சாதனங்களுக்கு தடையாக இருக்காது, "என்று தி ஹிந்து (ஆங்கிலம்) இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகளிடம் செல்போன்கள்
இதுகுறித்து இசிஐஎல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சிறைகளிலும் முக்கிய நிறுவனங்களிலும் அதிமுக்கியமான நபர் பாதுகாப்புக்காக நிறுவப்படத் தகுந்தவகையில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஜெர்மன் ஜாமர்ஸ்.
அதிகமான அளவில் மாவோயிஸ்டுகள் தங்கவைக்கப்பட்டுள்ள சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மத்திய சிறைச்சாலைகளின் உயர் பாதுகாப்புத் தொகுதிகளில் இந்த ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஜார்கண்ட் முதல்வரின் பாதுகாப்பு நடைமுறைகளில் இந்த கேட்ஜெட்களும் சேர்க்கப்பட்டு அவர்கள் நிறைய ஜாமர்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர் என பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் இசிஐஎல் பொறியாளர்கள் புழல் சிறைவளாகத்திற்கு வந்து பரிசோதித்தனர். அவர்கள் ஜாமர் கருவிகளை நிறுவப்படும் இடங்களை மதிப்பீடு செய்தனர்.
தமிழக சிறைச்சாலைகளில் நீண்டகால தீர்வுக்கு மொபைல் போன் ஜாமர்கள் நிறுவப்பட முடியாது. ஏனெனில் இது சிறை வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் உள்ள இணைப்புளில் தொடர்ந்து குறுக்கிடும்.
தொடர் அச்சுறுத்தல்
சிறைச்சாலையில் பணிபுரியும் சிலர் குற்றம்சாட்டிவருவதுபோல சிறைச்சாலைகளில் கைதிகளிடையே செல்போனில் பேசிக்கொள்ளுதல் கட்டுப்படுத்த முடியாத அச்சுறுத்தலாகவே இன்றுவரை இருந்துவருகிறது.
சிறைக்குள்ளேயே சதி திட்டங்கள் தீட்டப்பட்டு வெளியே நடமாடும் குண்டர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு நிறைய குற்றச் செயல்கள் அரங்கேற்றப்படுவதாக நம்பப்படுகிறது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் இருந்த நூற்றுக்கணக்கான செல்போன்களை கைப்பற்றினர். செல்போன் கைப்பற்றப்பட்டவர்களில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள கைதிகளில் ஒருவரான வி.ஸ்ரீஹரன் என்கிற முருகனும் ஒருவர்.
அனைத்து மத்திய சிறைச்சாலைகளின் நுழைவுவாயியில் கடுமையான பரிசோதனைகள், தடைகள் இருந்த போதிலும் மொபைல் தொலைபேசிகள் பல வழிகளில் கைதிகளை சென்றடைகின்றன. செல்போன்களுடன் சிம்கார்டுகளையும் சேர்த்தே பறிமுதல் செய்யப்படுகின்றன.
''செல்போன் பறிமுதல் செய்பவர்களுக்கென்றே புலனாய்வு அமைப்புகளின் பகுப்பாய்வு குறிப்புகள் உதவுகின்றன. கைதிகள் மொபைல் ஃபோன்களை பயன்படுத்த உடந்தையாகவோ அல்லது மொபைல் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அதை தடுத்துநிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்ததாகவோ குற்றஞ்சாட்டப்பட்ட பல சிறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன "என்று ஒரு மூத்த போலிஸ் அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT