Last Updated : 19 Apr, 2017 04:57 PM

 

Published : 19 Apr 2017 04:57 PM
Last Updated : 19 Apr 2017 04:57 PM

திங்கள் முதல் இன்றுவரை சூறாவளி சுழலில் டி.டி.வி.தினகரன்

இந்த வாரம் முழுவதும் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதை உணர்த்தும் வகையில் வாரத்தின் முதல்நாளே செய்திகள் குவியத்தொடங்கின. அத்தனையிலும் தினகரனே பிரதானம்.

இரட்டை இலை சின்னத்துக்காக அதிமுக அம்மா அணியும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருக்க, சின்னத்துக்காக தினகரன் லஞ்சம் கொடுத்தார் என்ற தெறிப்புச்செய்தியுடன் திங்கள்கிழமை பரபரப்பு தொடங்கியது.

திங்கள்கிழமை முதல் இத்தருணம் வரையிலான தினகரன் குறித்த செய்திகளின் தொகுப்பு:

17.04.2017: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வாக்கியதாக சுகேஷ் சந்திரசேகர் (24) டெல்லியில் கைது.

17.04.2017: அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்கியதாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு.

17.04.2017: சுகேஷ்சந்திர சேகர் யார் என்றே எனக்குத் தெரியாது. உங்களைப்போலத்தான் நானும் தொலைக்காட்சியைப் பார்த்து செய்தியை தெரிந்து கொண்டேன். யாருக்கும் பணம் கொடுக்கவில்லை- சென்னையில் தினகரன் பேட்டி.

17.04.2017: அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத் தயார்- ஓபிஎஸ் பேட்டி

17.04.2017: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே.சசிகலாவைப் பார்ப்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார் டிடிவி.தினகரன் (நேரம்- காலை 10.30 மணி)

17.04.2017: தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இரு முறை சந்தித்து ஆலோசனை.

17.04.2017: ஓபிஎஸ் கருத்து வரவேற்கத்தக்கது- தம்பிதுரை

17.04.2017: பெங்களூருவில் மதியம் 2.30 மணியளவில் சசிகலாவை சந்திக்க அனுமதி வாங்கிவைத்திருந்தும் மாலை 6.30 மணி வரையிலும் தினகரன் பெங்களூரு வரவில்லை.

17.04.2017: டெல்லி போலீஸார் தினகரனுக்கு சம்மன் கொடுக்க தயாராகிவிட்டனர் என்று தகவல் பரவியது.

17.04.2017: தினகரன் எங்கே? ஊடகங்களில் விவாதம்

17.04.2017: சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்கள் தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை.

17.04.2017: இரட்டை இலை சின்னத்தை மீட்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்- ஆலோசனைக்குப் பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

17.04.2017: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைவர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

17.04.2017: தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் உருவான நிலையில் டிடிவி.தினகரன் சசிகலாவை பார்க்காமலேயே சென்னை திரும்பினார்.

18.04.2017: அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஐ.என்.எஸ். போர்க்கப்பலில் பயணம் செய்தனர்.

18.04.2017: இந்தப் பயணத்தில் எந்த அரசியலும் இல்லை- டி.ஜெயக்குமார்

18.04.2017: முதல்வர் வீட்டில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி அடுத்தடுத்து ஆலோசனை

18.04.2017: தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், அதிமுகவில் சசிகலா குடும்ப ஆதிக்கம் இருக்கும்வரை இணைப்புக்கு வாய்ப்பேயில்லை எனத் தகவல்.

18.04.2017: கப்பலில் இருந்து திரும்பியதும் மீண்டும் அமைச்சர்கள் ஆலோசனை.

18.04.2017: ஆலோசனைக்குப்பின் சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி, ஆட்சியை காப்பாற்றுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது- டி.ஜெயக்குமார்.

19.04.2017: கட்சிக்கும் ஆட்சிக்கும் உகந்த முடிவை எடுப்பேன்- தினகரன்

19.04.2017: தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

19.04.2017: கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அமைச்சர்கள் என்னிடம் ஆலோசித்திருந்தால் நானே அறிவித்திருப்பேன்- தினகரன்.

19.04.2017: தொண்டர்களின், மக்களின் விருப்பத்திற்கு இணங்கவே நாங்கள் தர்மயுத்தம் தொடங்கினோம். சசிகலா குடும்பத்தை ஒதுக்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளது அந்த யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி- ஓபிஎஸ்.

19.04.2017: எந்தக் காரணத்தை கொண்டும் கட்சி பிளவுபட்டு விடக்கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி- தினகரன்.

19.04.2017: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி.தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்.

இன்னும் தினகரன் பரபரப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x