Published : 28 Nov 2014 11:31 AM
Last Updated : 28 Nov 2014 11:31 AM
ஜோலார்பேட்டை ஒன்றியம், தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்கிற ரவிசங்கர்(28). இவர் கடந்த 4 ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.
பின்பு, ஒப்பந்த காலம் முடியும் போது அந்நிறுவனத்தின் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்ட ரவிசங்கர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
மனைவி, குழந்தையுடன் சந்தோஷமாக இருந்த ரவிசங்கர் மீண்டும் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்தார். ஏற்கெனவே வேலை பார்த்த அதே நிறுவனத்தில் வேலைக்குப் போக எண்ணிய ரவிசங்கர், அதற்கான அனுமதி கேட்டு காத்திருந்தார்.
இதற்கிடையே, வரும் 30-ம் தேதி சிங்கப்பூர் செல்ல இருப்ப தாக நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்துகொண்ட ரவிசங்கர், வெளிநாடு செல்வதற்கு முன் தன் நண்பர்களுக்கு நேற்று முன்தினம் மது விருந்து அளித்தார்.
பின்பு வீட்டுக்கு சென்ற ரவிசங்கருக்கு விசா மறுக்கப்பட்ட தகவல் தெரியவந்தது.
வெளிநாடு செல்வதாக அனைவரிடம் கூறிவிட்டு, இப்போது அது நடக்காமல் போனால் அவமானம் என்று எண்ணிய ரவிசங்கர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தாமலேரிமுத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றார்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு லாரிக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தற்கொலை செய்து கொண்ட ரவிசங்கருக்கு வேலுபிரியா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT