Published : 13 Nov 2014 10:31 AM
Last Updated : 13 Nov 2014 10:31 AM

ஆண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை: மன நல ஆலோசகர்கள் கருத்து

ஆண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை என்று மன நல ஆலோசகர் கள் கூறியுள்ளனர்.

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து காப்பது எப்படி என்ற தலைப்பில் பள்ளி முதல்வர்கள், மன நல ஆலோசகர்கள் கலந்து கொண்ட ஒரு நாள் பயிற்சிபட்டறை சென்னை யில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பேசிய மனநல ஆலோசகர் ராதிகா கூறுகை யில், “இந்தியாவில் ஆறில் ஒரு ஆண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறது. பாலியல் துன்புறுத்தல் என்றாலே அது பெண்களுக்குத்தான் என்ற எண்ணம் நமது மனதில் பதிந்து விட்டதால், ஆண் குழந்தை களின் பிரச்னை குறித்து பெற்றோர் களுக்கும், ஊடகங் களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை,” என்றார்.

பயிற்சி பட்டறையில் பேசிய மன நல ஆலோசகர் பூர்ணிமா கூறுகை யில், “ஆண் குழந்தை வலிமையா னவன். அவன் தன்னை பாதுகாத் துக் கொள்வான். ஆனால், பெண் களுக்குதான் பாதுகாப்பு தேவை என்று பலர் நினைக்கின்ற னர். 25 வயது பெண்ணுக்கு பாதுகாப்பு தேவை என்பது உண்மை. அதே போல், 12 வயது சிறுவனுக்கும் பாதுகாப்பு தேவை,” என்றார்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட சென்னையிலுள்ள செயிண்ட் கொலம்பன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளியின் குழந்தை உரிமைகள் குழுவின் பொறுப்பாளர் இசபெல் தாமஸ் கூறுகையில், “எங்கள் பள்ளி அமைந்துள்ள பகுதி கூட்ட நெரிசல் மிகுந்தது. குழந்தைகள் பள்ளி முடிந்து வெளியில் வரும் போது, பலர் அவர்களை சீண்ட வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளுக்கு ‘நல்ல தொடுதல்’ ‘தவறான தொடுதல்’ பற்றி சொல்லிக் கொடுக்கிறோம்.

பெரும்பாலான துன்புறுத்தல் கள் தெரிந்தவர்கள் மூலமாக தான் நடைபெறுகின்றன. ஆனால், குழந்தைகள் அதை கூறும் போது பெற்றோர்கள் குறிப்பாக கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே, பெற் றோர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு அளிக்க வேண்டும்,” என்றார்.

குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை மையமாக கொண்டு பணிபுரியும் ஸ்மைல் என்ற தொண்டு நிறுவனம் இந்த பயிற்சி பட்டறையை நடத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x