Published : 06 Nov 2014 08:44 AM
Last Updated : 06 Nov 2014 08:44 AM

மாற்று வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் புதிய திருத்தம்: தேர்தல் ஆணைய அறிவிப்பால் கட்சிகளுக்கு திடீர் சிக்கல்

அரசியல் கட்சிகள் மனு தாக்கலின் போதே, தங்கள் அதிகாரப் பூர்வ வேட்பாளருடன், மாற்று வேட் பாளரைக் குறிப்பிடா விட்டால், அதிகாரப்பூர்வ வேட்பாளரின் மனு தள்ளுபடியாகும் போது, மாற்று வேட்பாளரும் சுயேச்சையாகவே கருதப்படுவார் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள் ளது.

தேர்தலில் அரசியல் கட்சி களின் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளரும், அவருக்குத் துணை யாக மாற்று வேட்பாளர் களும் நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ளது. கட்சிகளின் அதிகாரப் பூர்வ வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் போது, ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களை மாற்று வேட்பாளர்களாக, சின்னத்துக் கான அனுமதிக் கடிதம் கொடுத்து, தேர்தலில் நிற்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது.

அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென மனுவை வாபஸ் பெற்று விட்டாலோ அல்லது அவரது மனு பரிசீலனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லை அல்லது விதிகளை பின்பற்றவில்லை போன்ற காரணங்களால் தள்ளு படி செய்யப்பட்டால், மாற்று வேட்பாளரின் பெயர் அதிகாரப் பூர்வ வேட்பாளர் பட்டியலில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த நடைமுறையில், மாற்று வேட் பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட் டோர் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் போது, அதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் தேர்தல் துறைக்கு குழப்பம் ஏற்படுகிறது.

அதனால் புதிய திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண் டுள்ளது. அதன்படி, இனி அதிகாரப்பூர்வ வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போதே, தங்கள் கட்சியின் மாற்று வேட்பாளர் யார் என்பதை குறிப்பிட வேண்டும். அப்போது அதிகாரப்பூர்வ வேட்பா ளர் தள்ளுபடியானால், மாற்று வேட்பாளர் அதிகாரப்பூர்வ வேட்பா ளராக கருதப்பட்டு, அவருக்கு கட்சிக்கு அனுமதிக்கப்பட்ட சின்னம் வழங்கப்படும். அவ்வாறு குறிப்பிடாவிட்டால், மாற்று வேட்பா ளராக மனு செய்தவர்கள் சுயேச்சை யாகவே கருதப் படுவார்கள். அவரை கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அனுமதிக்க முடியாது என்று, தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிக் கையை, தேர்தல் ஆணையம், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x