Published : 09 Nov 2014 08:50 AM
Last Updated : 09 Nov 2014 08:50 AM
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர் கள் 5 பேரை காப்பாற்ற இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர் சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 28.11.2011 அன்று மீன் பிடிக்கச் சென்றனர். இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திச் சென்ற தாகக் கூறி அவர்கள் 5 பேரும், இலங்கை மீனவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசார ணைக்குப் பின், தமிழக மீனவர்கள் 5 பேர் உட்பட 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து அக்.30-ம் தேதி கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், “தமிழக மீனவர் கள் மீது பொய் வழக்கு போடப் பட்டுள்ளது. இவர்கள் 5 பேரும் அப்பாவிகள்” என்கிறார் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த யு.அருளா னந்தம். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் போதைப் பொருள் கடத்திச் சென்று இலங்கை மீனவர்களிடம் கொடுத்தனர் என்பதை நிரூபிக்க நீதிமன்றத் தில் எந்த ஆதாரமும் காட்டப்பட வில்லை. தீர்ப்பு நாளன்று “நாங்கள் போதைப் பொருள் வாங்கியது உண்மைதான். ஆனால், இந்த 5 தமிழக மீனவர்களும் அப்பாவி கள். இவர்களிடமிருந்து நாங்கள் போதைப் பொருளை வாங்க வில்லை” என்று இலங்கை மீனவர் களில் ஒருவர் நீதிபதியிடம் கூறியுள் ளார்.
தமிழக மீனவர்கள் அப்பாவிகள் என்பதால்தான் அவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறது. எனினும் தமிழக அரசின் இந்த உணர்வை மத்திய அரசு ஏனோ புரிந்து கொள்ளவில்லை. இலங்கை அரசிடம் உரிய முறையில் இந்திய அரசு பேசியிருந்தால் அப்பாவி மீனவர்களை எப்போதோ மீட்டு வந்திருக்க முடியும். இந்நிலையில் தமிழக மீனவர்களை காப்பாற்ற சட்ட ரீதியான எல்லா உதவிகளையும் செய்வோம் என மத்திய அரசு கூறுவது வெறும் கண்துடைப்பு.
கொழும்பு சிறையில் உள்ள 5 தமிழக மீனவர்களையும் தீர்ப்புக்கு மறுநாள் சந்தித்துப் பேசினேன். மேல் முறையீடு செய்வதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. ‘செய்யாத குற்றத்துக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் சிறையில் இருப்பது? இலங்கை அரசிடம் இந்திய அரசைப் பேச வைத்து எங்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை எடுங்கள்’ என அவர்கள் கதறுகின்றனர்.
தீர்ப்புக்கு பிறகு மீனவர்களை விடுவிக்க இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன. ஆனால் மேல் முறையீடு, தண்டனைக் குறைப்பு போன்றவையெல்லாம் நிரந்தர தீர்வை தராது. மேல் முறையீட்டு நடவடிக்கைகளை மீனவ மக்கள் விரும்பவில்லை. இந்திய - இலங்கை அரசுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி உடனே தீர்வு காண்பதையே விரும்புகின்றனர்.
இவ்வாறு அருளானந்தம் கூறினார்..
மீனவர்கள் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் எல்.டி.ஏ. பீட்டர் ராயன் கூறும்போது, “தூதரக ரீதியான நடவடிக்கைகள் மூலம் இந்திய அரசால் நமது மீனவர்களை நிச்சயம் காப்பாற்ற முடியும். ஆனால் இந்திய அரசு செய்யுமா என்பதுதான் சந்தேகமாக உள்ளது" என்றார்.
இதுகுறித்து மத்திய அரசின் முன்னாள் கூடுதல் சொலிசிடர் ஜென ரலும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் கூறும் போது, “இலங்கை நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 34-ன்படி ஒருவர் எந்தக் குற்றம் செய்திருந்தாலும், ஒரு வருக்கு என்ன தண்டனை விதிக் கப்பட்டிருந்தாலும் அவருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கான அதிகாரம் இலங்கை அதிபருக்கு உள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவிக்குமாறு இந்திய அரசு இலங்கை அதிபரிடம் வற்புறுத்தலாம். இந்திய அரசு இலங்கை அரசிடம் பேசினால், தமிழக மீனவர்கள் விடுதலை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT