Published : 25 Nov 2014 12:26 PM
Last Updated : 25 Nov 2014 12:26 PM

தமிழகத்தில் 100 புதிய கிளைகளை திறக்க ஆந்திரா வங்கி திட்டம்

நடப்பு நிதியாண்டுக்குள் தமிழகத்தில் 100 புதிய கிளைகளைத் திறக்க ஆந்திரா வங்கி திட்டமிட்டுள்ளது.

ஆந்திரா வங்கி 26 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது 2,185 வங்கிக் கிளைகள், 2,020 ஏடிஎம்கள் உள்ளன. இந்த வங்கி நவம்பர் 24 முதல் 28-ம் தேதி வரை வங்கி நிறுவனர் தினத்தை கொண்டாடி வருகிறது.

இதனையொட்டி வங்கியின் சென்னை மண்டல மேலாளர் கே.வி.சுப்பையா அளித்த பேட்டி:

ஆந்திரா வங்கி ரூ.2.60 லட்சம் கோடி அளவுக்கு வர்த்த கம் செய்து வருகிறது. பிரதமரின் அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தின்கீழ் 30.9.2014 வரை 10.77 லட்சம் புதிய சேமிப்புக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. நிறுவனர் தினத்தை யொட்டி நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டு வங்கியின் செயல்பாட்டை மேம்படுத்தவுள்ளோம். பள்ளிக் சிறார்களுக்கு கட்டுரை, ஓவியம், சொற்பொழிவு போட்டிகள் நடத் தப்படும். தூய்மையான இந்தியா இயக்கம் நடத்தப்படும். நவ.28-ம் தேதி வங்கியின் மண்டல அலுவல கங்களில் ரத்ததான முகாம் நடத்தப்படும். வங்கி வழங்கும் பல்வேறு கடன்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை பிராசஸிங் கட்டணம் கிடையாது. இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத் திக்கொள்ள வேண்டும்.

2014-15-ம் நிதியாண்டில் சென்னை மண்டலத்தில் 100 புதிய கிளைகளை திறக்கும் நடவடிக் கையின் ஒரு பகுதியாக உடனடி யாக 26 கிளைகள் திறக்கப்பட வுள்ளன என்று சுப்பையா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x