Last Updated : 15 Nov, 2014 10:26 AM

 

Published : 15 Nov 2014 10:26 AM
Last Updated : 15 Nov 2014 10:26 AM

பாஜக நிர்வாகிகள் பட்டியல்: பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளருக்கே வாய்ப்பு

தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் முன்னாள் மாநிலத் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவா ளர்களுக்கே மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சரானதால் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப் பட்டார். இந்நிலையில் தமிழக பாஜவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியானது.

இதில் பொன்.ராதாகிருஷ் ணனின் ஆதரவாளர்களுக்கே அதிகமாக பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

புதிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழிசையின் ஆதரவாளர் களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கருதப்பட்டது.

ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பொன்.ராதா கிருஷ்ணன் ஆதரவா ளர்களுக்கே மீண்டும் முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணனின் பதவிக் காலத்தில் அவருக்கு நெருக்கமாக செயல்பட்டு வந்த வானதி னிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட் டோர் மாநில பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து மாநில துணைத் தலைவராகியுள்ளனர். சக்கரவர்த்தி துணை தலைவராகவும், சரவண பெருமாள் பொதுச் செயலா ளராகவும் தொடர்கிறார்கள். இவர்கள் பொன்ராதாகிருஷ் ணனின் ஆதரவாளர்கள்.

அமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ராஜுலுவுக்கு மீண்டும் அதே பொறுப்பு கிடைத்துள்ளது.

மாநில பொருளாளராக இருந்த எஸ்.ஆர்.சேகருக்கும், அலுவலக செயலாளராக இருந்த சர்வோத்தமனுக்கும் அதே பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பொன்.ராதாகிருஷ்ணன் காலத்தில் பொறுப்புக்கு வந்தவர்கள்.

தமிழிசை சவுந்தரராஜன், பரிந்து ரைத்ததில் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட் டுள்ளன.

தலைவர் பொறுப்பில் உள்ளவர் களுக்கு ஏற்றவாறு நிர்வாகிகள் அமைந்தால்தான் கட்சிப் பணிகளை ஆக்கப்பூர்வமாக செய்ய முடியும்.

ஆனால் இந்த முறை பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களுக்கே பொறுப் புகள் அறிவிக்கப்பட்டிருப்பது தமிழிசைக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாஜக மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வானதி னிவாசனிடம் இதுபற்றி கேட்ட போது, “பாஜகவில் தனி நபர் விருப்பத்தின் பேரில் பதவிகள் வழங்கும் முறை அறவே கிடையாது. கடந்த காலங் களில் கட்சிக்காக உழைத்தவர் களுக்கு பொறுப்பு வழங்கப்பட் டுள்ளது.

அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் ஆலோசித்தே நிர்வாகிகளை நியமித்துள்ளார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x